இன்றைய அப்டேட்: பொன்னியின் செல்வனில் நடிகர் தனுஷின் ஹீரோயின்!
சென்னை: மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில், நடிகர் தனுஷுடன் ஹீரோயினாக நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமியும் இணைந்துள்ளார்.
கல்கியின் பிரமாண்ட வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய் , கீர்த்தி சுரேஷ், உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் தாய்லாந்து காடுகளில் நடக்கிறது. இதற்காக மணிரத்னம் தனது குழுவுடன் அங்கு சென்று லொகேஷன் பார்த்து வந்தார்.
இந்நிலையில் இந்தப் படத்தில் தானும் இணைந்திருப்பதாக மலையாள நடிகர் லால் கூறியிருந்தார். 'என் கனவு நனவாகியிருக்கிறது. இந்தப் படத்துக்காக குதிரை சவாரி பயிற்சி பெறுகிறேன்' என்று தெரிவித்திருந்தார். இதில் த்ரிஷாவும் இணைந்திருப்பதாக நேற்று செய்தி வெளியானது. இன்றைய அப்டேட்டாக, நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இதை படக்குழுத் தெரிவித்துள்ளது.

ஐஸ்வர்யா லட்சுமி, விஷாலுடன் ஆக்ஷன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சுருளி படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் நிவின் பாலி, டோவினோ தாமஸ், பகத் பாசில், ஆசிப் அலி, ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











