Don't Miss!
- Automobiles
எவ்வளவு காசை கொட்டி கொடுத்தாலும் இந்த புதிய ஜாவா பைக்கை வாங்குறது கஷ்டம்!! காரணம் என்ன தெரியுமா?
- Lifestyle
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை நைட் டைம்-ல போடுங்க...
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- News
ட்விஸ்ட்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஆதரவு கேட்ட எடப்பாடி.. நிராகரித்த ஏ.சி.சண்முகம்! என்ன சொன்னர்
- Finance
தீபிந்தர் கோயல் கொடுத்த செம அப்டேட்.. 800 பேருக்கு நல்ல சான்ஸ்.. நீங்க ரெடியா?
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
லைஃப் டைம் செட்டில்மென்ட் தான் போல.. அர்ஜுன் தாஸை காதலிக்கும் ஐஸ்வர்யா லக்ஷ்மி.. க்யூட் பிக்!
சென்னை: கைதி படத்தில் கணீர் குரலுடன் வில்லத்தனத்தில் மிரட்டிய நடிகர் அர்ஜுன் தாஸ் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மியை காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பூங்குழலியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு காதலை வெளிப்படுத்தி உள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி கடந்த ஆண்டு ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் இமிடியேட் கனவக்கன்னியாக மாறிய நிலையில், இப்படி திடீரென பல இளைஞர்களின் இதயங்களை நொறுக்குவது போன்ற பதிவை போட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி படத்தை போலவே தமிழ்நாட்டு பையனை கேரளா பொண்ணு கரெக்ட் செய்து விட்டார் என கமெண்ட்டுகள் பறக்கின்றன.
யாராலும் விஜய்யை தடுக்க முடியாது… புஷ்பா ஹீரோ அல்லு அர்ஜுன் சைட்ல இருந்து இப்படி ஒரு ஆதரவா?

அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லக்ஷ்மி காதல்
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த கட்டா குஸ்தி ஹீரோயின் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிகர் அர்ஜுன் தாஸை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அர்ஜுன் தாஸ் தோளில் சாய்ந்துக் கொண்டு படு ரொமாண்டிக்காக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு கூடவே ஹார்ட் சிம்பிளையும் போட்டு தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார்.

லைஃப் டைம் செட்டில்மென்ட்
சென்னை பையன் அர்ஜுன் தாஸுக்கு 32 வயதாகிறது. 2012ல் வெளியான பெருமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். ரகுவரன் போல வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரரான இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தியின் கைதி படத்தில் வில்லனாக நடித்து கலக்கினார். அந்த படத்தில் இவர் பேசிய பிரபலமான லைஃப் டைம் செட்டில்மென்ட் டா வசனத்தையே தற்போது ரசிகர்கள் கமெண்ட் போட்டு வாழ்த்தி வருகின்றனர்.

ஒரே வயசு
இப்போதெல்லாம் நடிகைகள் இளம் வயது பையன்களை தான் காதலித்து திருமணம் செய்கின்றனர். ஆனால், ஐஸ்வர்யா லக்ஷ்மி அந்த வகையில் பரவாயில்லை. அவருக்கும் 32 வயசு தான் ஆகுது. இருவரும் எங்கே எப்படி சந்தித்து காதல் வலையில் விழுந்தனர் என்பது தான் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள பெரிய கேள்விக் குறியாகவே மாறி உள்ளது.

பூங்குழலி கமிட்டட்
விஷாலின் ஆக்ஷன் படத்திலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி அதன் பின்னர் தனுஷ் உடன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து இருந்தார். ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் சமுத்திரகுமாரி பூங்குழலியாக அந்த கடலில் இருந்து படகுக்கு அவர் எழுந்து வந்த காட்சியால் ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பித்தனர். தற்போது அவர் கமிட்டட் என்கிற கசப்பான செய்தி ரசிகர்களை கடுப்பேற்றி உள்ளது.

ரியல் கட்டா குஸ்தி
கட்டா குஸ்தி படத்தில் தமிழ்நாட்டு பையனுக்கும் கேரள பொண்ணுக்கும் திருமணம் நடக்கும் அதே போல தற்போது ரியல் கட்டா குஸ்தியாகவே சென்னை பையன் அர்ஜுன் தாஸ் மற்றும் கேரளா பொண்ணான ஐஸ்வர்யா லக்ஷ்மியும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சினிமாவா இருக்கணும்
இவர்கள் இருவரும் இப்படி பளிச்சென சொல்லியும் புதிய படத்துக்கான அறிவிப்பாக இருக்கணும் என இன்னமும் ரசிகர்கள் கொஞ்சம் கூட நம்பாமல் கமெண்ட் போட்டு வருகின்றனர். கூடிய விரைவிலேயே இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

டேட்டிங்
இருவரும் சில மாதங்களாக டேட்டிங் செய்து வருவதாகவும் சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு இருவரும் காதலை வெளிப்படுத்திய நிலையில் தான் தற்போது இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐஸ்வர்யா லக்ஷ்மி அடுத்து பொன்னியின் செல்வன் 2 படத்தில் மீண்டும் பூங்குழலியாக ரசிகர்களை ரசிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டா குஸ்தி வெற்றி மூலம் பல படங்களும் புக் ஆகி வருகின்றன.