ஐஸ்வர்ய லட்சுமிக்கு கொரோனா...வீட்டு தனிமையில் உள்ளார்
சென்னை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து இருந்து வருகிறது. அதிலும் சினிமா பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
இந்த வரிசையில் தற்போது நடிகை ஐஸ்வர்ய லட்சுமிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஐஸ்வர்ய லட்சுமி, கொரோனா உறுதி செய்யப்பட்டதால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்த போது, நேற்று ஐஸ்வர்யாவிற்கு கோவிட் 19 பாசிடிவ் என தெரிய வந்தது. அவருக்கு லேசான அளவிலேயே அறிகுறிகள் உள்ளது. இருந்தாலும் கேரளாவில் உள்ள தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மருத்துவ ஆலோசனைப்படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடித்து வருகிறார் என்கின்றனர்.
கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி நடிக்க உள்ளார். இந்த படத்தை நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய உள்ளனர். அத்துடன் மலையாளத்தில் 3 படங்களிலும், தெலுங்கில் தான் அறிமுகமாகும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் ஐஸ்வர்ய லட்சுமி நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகி வருவதால் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஐஸ்வர்ய லட்சுமிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். ஐஸ்வர்யா இந்த படத்தில் பூங்குழலி என்ற கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











