twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனுஷ் ட்வீட்டுக்கு லைக் போட்டாரா ஐஸ்வர்யா... எல்லாமே அதுக்குத்தான் … சமூக வலைதளத்தில் பரவும் தகவல்!

    |

    சென்னை : தனுஷ் போட்ட ட்வீட்டுக்கு ஐஸ்வர்யா லைக் போட்டுள்ளது சமூக வலை தளத்தில் தற்போது பேசுபொருளாக உள்ளது.

    தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்ந்து வருகிறார். துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமான தனுஷ், பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார்.

    தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார்.

    மெல்லிசை மன்னனுக்கு நினைவிடம்... ரூ ஒரு கோடி ஒதுக்கீடு செய்த கேரள அரசு மெல்லிசை மன்னனுக்கு நினைவிடம்... ரூ ஒரு கோடி ஒதுக்கீடு செய்த கேரள அரசு

    பிரிந்தனர்

    பிரிந்தனர்

    நடிகர் தனுஷ் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். திடீரென கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துவிட்டு பிரிந்து விட்டனர். இவர்கள் பிரிந்ததற்கான காரணம் குறித்து பல வதந்திகள் இணையத்தில் பரவி வருகின்றன.

    இருவரும் பிஸி

    இருவரும் பிஸி

    விவகாரத்து அறிவிப்புக்கு பின் தனுஷ் வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார். அதே போல ஐஸ்வர்யாவும் பயணி மியூசிக் வீடியோவில் பிஸியாகி உள்ளார். இந்த பயணி ஆல்பத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது இந்த ஆல்பம் சிறப்பாக வர பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

    மன அழுத்தத்தில்

    மன அழுத்தத்தில்

    ஐஸ்வர்யா கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதேபோல கடந்த வாரம் காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஐஸ்வர்யா மனஅழுத்தத்தில் இருப்பதாகவும் எப்போதும் சோர்வுடன் காணப்படுவதாகவும், தனுஷுடன் விரைவில் சேர்ந்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Recommended Video

    Maaran Movie Review by Poster Pakiri | Dhanush | Malavika Mohanan | Karthick Naren | Filmibeat Tamil
    லைக் போட்ட ஐஸ்வர்யா

    லைக் போட்ட ஐஸ்வர்யா

    இந்நிலையில், மாறன் திரைப்படம் ஓடிடியில் கடந்த வாரம் வெளியான நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், Maaran is now yours.. Om Namashivaaya என பதிவிட்டு இருந்தார். இந்த ட்வீட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக் செய்துள்ளார். இதை தனுஷின் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வைரலாக்கி வருகின்றனர். உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் அவர்களை சேர்த்து வைக்க பல முயற்சிகள் செய்து வருகின்றனர். ஒரு லைக் இவர்களின் வாழ்க்கையை மாற்றினால் நல்லாத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    English summary
    Aishwarya likes Dhanush's tweet
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X