கொரோனா சிகிச்சை முடிந்து ஐஸ்வர்யா ராய் டிஸ்சார்ஜ்.. அபிஷேக், அமிதாப்புக்கு தொடர் ட்ரீட்மென்ட்!

By

மும்பை: கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

Aishwarya Rai & Aradhya Tested Negative and Discharged

மகாராஷ்ட்ர மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மும்பையில் இந்த வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

இதைக் கட்டுப்படுத்த மகாராஷ்ட்ர மாநில அரசும் மும்பை மாநகராட்சியும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

நடிகர் அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப் பச்சன்

பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது. அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது, கடந்த 11 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இத்தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் அமிதாப்பச்சன் வெளியிட்டிருந்தார்.

பரிசோதனை

பரிசோதனை

அதில், கடந்த 10 நாட்களில் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருமே கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை செய்துகொள்ளுங்கள் என்று அவர் கூறியிருந்தார். இதையடுத்து சினிமா, அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி ட்வீட் செய்தனர். அவரது ரசிகர்கள் விரைவில் குணமடைய யாகம் செய்தனர்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இந்நிலையில், அமிதாப் பச்சனின் மருமகளும் அபிஷேக் பச்சன் மனைவியான ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 12 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதேபோன்று ஐஸ்வர்யா ராய் மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆனால், ஜெயா பச்சனுக்கு பாதிப்பு இல்லை. இதையடுத்து ஐஸ்வர்யா ராயும் ஆரத்யாவும் வீட்டில் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டனர்.

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல்

ஆனால், பின்னர் கொரோனா பாதிப்பு அதிகமானதை அடுத்து அமிதாப், அபிஷேக் பச்சன் அனுமதிக்கப்பட்டுள்ள அதே தனியார் மருத்துவமனையில், அவர்களும் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராயும் அவர் மகள் ஆரத்யாவும் இப்போது குணமடைந்துள்ளனர். அவர்களுக்கு மீண்டும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இதனால் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பினர்.

தொடர்ந்து இருக்கிறோம்

தொடர்ந்து இருக்கிறோம்

இந்த தகவலை நடிகர் அபிஷேக் பச்சன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். 'தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. ஐஸ்வர்யாவும் ஆரத்யாவும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டுக்குத் திரும்பிவிட்டனர். நானும் அப்பா (அமிதாப்பச்சன்)வும் மருத்துவக் கண்காணிப்பில் தொடர்ந்து இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X