திடீர் பிரச்னை.. தனிமைப்படுத்தப்பட்ட ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையில் அட்மிட்டானது இதற்காகத்தான்!

By

மும்பை: கொரோனாவுக்காக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நடிகை ஐஸ்வர்யா ராயும் அவர் மகளும் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன் என்பது தெரியவந்துள்ளது.

Recommended Video

Aishwarya Rai Bachchan &Daughter Aradhya Tested Positive

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மும்பையில் இந்த தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

அது பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. இதைக் கட்டுப்படுத்த மகாராஷ்ட்ர மாநில அரசும் மும்பை மாநகராட்சியும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

 நடிகர் அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப் பச்சன்

பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது. அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது, கடந்த 11 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இத் தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் அமிதாப்பச்சன் வெளியிட்டிருந்தார்.

பரிசோதனை

பரிசோதனை

அதில், கடந்த 10 நாட்களில் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருமே கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை செய்துகொள்ளுங்கள் என்று அவர் கூறியிருந்தார். இதையடுத்து சினிமா, அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி ட்வீட் செய்தனர். அவரது கொல்கத்தா ரசிகர்கள் விரைவில் குணமடைய யாகம் செய்து வருகின்றனர்.

 ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இந்நிலையில், அமிதாப் பச்சனின் மருமகளும் அபிஷேக் பச்சன் மனைவியான ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 12 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதேபோன்று ஐஸ்வர்யா ராய் மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆனால், ஜெயா பச்சனுக்கு பாதிப்பு இல்லை. இதையடுத்து ஐஸ்வர்யா ராயும் ஆரத்யாவும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

 மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல்

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராயும் அவர் மகள் ஆரத்யாவும் திடீரென்று வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு நேற்றிரவு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்தே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அமிதாப், அபிஷேக் பச்சன் அனுமதிக்கப்பட்டுள்ள அதே தனியார் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனித்தனி வார்டில்

தனித்தனி வார்டில்

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் கூறும்போது, ஐஸ்வர்யா ராய்க்குத் தொடர்ந்து இருமலும் இருந்தது. இப்போது நன்றாக இருக்கிறார். அனைவரும் சிகிச்சைக்குச் சிறப்பாக ஒத்துழைப்பு அளிக்கின்றனர். தனித்தனி வார்டில் இருக்கின்றனர். அமிதாப்பச்சனும் அபிஷேக் பச்சனும் இன்னும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் இருப்பார்கள்' என்று தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X