Aishwarya Rai Bachchan: விவாகரத்து? பொண்ணுக்காக மனம் மாறிய ஐஸ்வர்யா ராய்.. துள்ளிக் குதித்த மகள்!

மும்பை: கடந்த ஆண்டு முழுவதுமே மிகவும் சர்ச்சையாகவும் கிசுகிசுப்பாகவும் இருந்து வந்த செய்திகளில், ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்யப்போகின்றார்கள் என்ற தகவல்தான். எதாவது, பொது நிகழ்ச்சிகளில் சினிமா நிகழ்ச்சிகளில் இவர்களில் யாராவது தனியாக கலந்து கொண்டாலே, விவாகரத்து செய்யப்போகின்றார்கள் அதனால்தான், இவர்கள் ஒன்றாக எங்கேயும் கலந்து கொள்வதில்லை என விமர்சனங்கள் எழத் தொடங்கியது. இப்படியான நிலையில் மும்பை விமான நிலையத்தில் ஐஸ்வர்யா ராய், அவரது கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா மூவரும் தங்களது புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு திரும்பியது தொடர்பாக வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் அன்றைய காலகட்டத்தில் பல நூறு கோடிகள் செலவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகின்றனர். மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற மகள் பிறந்தார். இவர்களின் இல்லற வாழ்க்கை மிகவும் நிம்மதியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது.

aishwarya rai abhishek bachchan

யார் கண் பட்டது எனத் தெரியவில்லை, இருவருக்கும் இடையில் ஏற்படும் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள், நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. குறிப்பாக, ஒரு கட்டத்தில், இருவரும் விவாகரத்து செய்யப்போகின்றார்கள் என்று கிசுகிசுக்கள் எழத் தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் இருவரும் பிரியப்போகின்றார்கள் என்ற தகவல் அடிக்கடி ஊடகங்களில் வெளிவந்தவண்ணம் இருந்தது. இந்த கிசுகிசுக்களுக்கு மத்தியில், அபிஷேக் பச்சன் நடிகை நிம்ரத் கவுருடன் டேட்டிங்கில் இருக்கின்றார். ஐஸ்வர்யா ராயை விரைவில் விவாகரத்து செய்து கொண்டு, பின்னர் நிம்ரத் கவுருடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கவுள்ளார் என்றெல்லாம் கூட பாலிவுட் வட்டாரங்களில் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் பறந்தது.

விவாகரத்து: இப்படியான நிலையில், ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து கிசுகிசுவில் நிம்ரத் கவுரின் பெயர் அடிபட்டதும், நிம்ரத் கவுர் இது தொடர்பாக வெளிப்படையாக பேசி, தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இதற்கிடையில், அம்பானியின் மகன் திருமணத்தில் இருவரும் தனித்தனியே கலந்து கொண்டது, ஐஸ்வர்யா ராய் கையில் திருமண நிச்சயதார்த்த மோதிரம் இல்லாமல் இருந்தது என, சைமா விருது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் மட்டும் கலந்து கொண்டது என எல்லாம் சேர்ந்து, பெரிய கேள்விக்குறியாக மாறி நின்றது.

aishwarya rai abhishek bachchan

வீடியோ: ஐஸ்வர்யாவின் 51வது பிறந்த நாளுக்கு அபிஷேக் பச்சன் வாழ்த்து தெரிவிக்காமல் இருந்தார், அதேநேரத்தில் அபிஷேக் பச்சனின் படமான ஐ வான் டூ டாக் படத்திற்கும் ஐஸ்வர்யா ராய் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால் விவாகரத்து உறுதி என பேச்சுகள் எழுந்தது. இப்படியான நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை வெளிநாட்டில் முடித்துவிட்டு, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் தம்பதியர் தங்களது மகள் ஆராத்யாவுடன் மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கியுள்ளனர். மூவரும் இணைந்து விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்கு முன்னர், மகள் ஆராத்யா மிகவும் மகிழ்ச்சியாக துள்ளிக்குதித்தார். மகளின் இந்த செயலைப் பார்த்த ஐஸ்வர்யா ராய் மகளை செல்லமாக கண்டித்தார்.

மகள்: இவர்கள் மூவரும் ஒன்றாக மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் வீடியோகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. பலரும் இவர்கள் இணைந்து வாழ வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரிந்திருந்த இருவரையும் மகள் ஆராத்யாதான் சேர்த்து வைத்துள்ளார் என்ற தகவலும் இந்த செய்திகளோடு வேகமாக பரவி வருகின்றது. மகளுக்காகத்தான் இருவரும் தங்களது மனதை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X