Aishwarya Rai: மகளுக்காக மட்டுமே.. ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் இடையே என்ன பிரச்சனை?

மும்பை: பாலிவுட்டில் சில நடிகர்களுடன் காதலில் விழுந்து விட்டார் என கிசுகிசுக்கப்பட்டு வந்த ஐஸ்வர்யா ராய் 2007ம் ஆண்டு அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக் கொண்டார்.

1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால், பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான இருவர் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராய்.

Aishwarya Rai and Abhishek Bachchan will always unite for her daughter Aaradhya

இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் அவருக்கு டபுள் ரோல் தான். சுமார் 26 ஆண்டுகள் இந்திய சினிமாவையே கட்டி ஆண்டுவரும் ஐஸ்வர்யா ராய் திடீரென பல வருட திருமண உறவை முறித்து விட்டதாக பரவும் தகவல்கள் பாலிவுட்டில் பெரும் புயலை கிளப்பி உள்ளன.

அமீர்கான் முதல் தனுஷ் வரை: சமீப காலமாக பல ஆண்டுகள் திருமண வாழ்கையில் நடத்தி போர் அடித்து விட ஏதோ ஒரு ஈகோ பிரச்சனை காரணமாக பிரபலங்கள் விவாகரத்து கேட்டு பிரிந்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது இரண்டாவது மனைவியை பிரிந்த நிலையில், நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் அதிரடியாக விவாகரத்து பெற்று பிரிந்தானர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர். இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் பிரியப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வீட்டை விட்டு வெளியேற்றம்: நடிகை ஐஸ்வர்யா ராய் வீட்டை விட்டே வெளியேறி விட்டதாக திடீரென அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் தான் அவரது மகளின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கணவர் அபிஷேக் பச்சனும் மனைவி ஐஸ்வர்யா ராயும் ஒன்றாக கலந்து கொண்டு மகளின் பர்ஃபார்மன்ஸை மனதார கண்டு ரசித்தனர். மேலும், ஆர்ச்சீஸ் எனும் நெட்பிளிக்ஸ் படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சிக்கும் ஒன்றாக சென்றனர். அதில், அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மகளுக்காக மட்டுமே: ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இடையே கருத்து மோதல்கள் கடந்த சில ஆண்டுகளாகவே வெடித்து வருவதாகவும் மகளுக்காக மட்டுமே இருவரும் ஒரே வீட்டில் இருந்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், தொடர்ந்து குழந்தைக்கு முன்னால் சண்டை வேண்டாம் என நினைத்து தான் தற்போது இருவரும் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் மகளுக்கான விஷயங்களில் பங்கேற்பதாகவும், மகளின் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாக பங்கேற்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X