Aishwarya Rai - ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் பிரிகிறார்களா?.. அதில் உண்மை இல்லை என நிரூபித்த தம்பதி

மும்பை: Aishwarya Rai (ஐஸ்வர்யா ராய்) ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் பிரிகிறார்கள் என்று தகவல் வெளியான சூழலில் அது பொய் என்பது தெரிய வந்திருக்கிறது.

உலக அழகி பட்டத்தை இந்தியாவில் எத்தனை பேர் வாங்கினாலும் முதலில் நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராய்தான். அந்த அளவு அவர் தன்னுடைய தாக்கத்தை பலரிடம் செலுத்தியிருக்கிறார்.

Aishwarya Rai and Abhishek Bachchans split has been reported to be fake

பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட ஐஸ்வர்யா ராய் கடந்த ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் வென்று புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் அறிமுகம்: உலக அழகி பட்டம் வென்றவுடன் அவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன. அதன்படி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் உருவான இருவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெறாவிட்டாலும் மணிரத்னத்தின் இயக்கமும், ஐஸ்வர்யா ராயின் அழகும் திறமையும் பலரது கவனத்தை ஈர்த்தது.

பாலிவுட்டில் பிஸி: தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய் அடுத்தடுத்து பாலிவுட்டில் பிஸியானார். எந்த அளவுக்கு என்றால் ஒரே நாளில் 5 முதல் ஆறு படங்கள் நடிக்கும் அளவுக்கு பிஸியானார். பாலிவுட்டில் பிஸியாக இருந்தாலும் தமிழிலும் அவ்வப்போது செலக்ட்டிவ்வாக நடித்து வந்தார். அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ், ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன், மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படங்களில் நடித்தார்.

பொன்னியின் செல்வன்: அவர் கடைசியாக தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அந்தக் கதாபாத்திரத்தில் மிகசிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவரது கணவர் அபிஷேக் பச்சன்கூட ஐஸ்வர்யா ராயின் கரியரில் நந்தினி கதாபாத்திரம்தான் பெஸ்ட் என்று புகழ்ந்தது கவனிக்கத்தக்கது.

வெளியான தகவல்: இந்நிலையில் அபிஷேக் பச்சன் திருமணத்தின்போது போடப்பட்ட மோதிரம் இல்லாமல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதனை பார்த்த ரசிகர்கள் மோதிரம் இல்லாததால் அவர் ஐஸ்வர்யா ராயை பிரியப்போகிறார் என கூற ஆரம்பித்தனர். இதற்கு இருவருமே எந்த பதிலையும் அளிக்காமல் மௌனம் காத்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும் பிரியவிருக்கிறார்கள் என்ற தகவல் பொய் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதாவது அமிதாப் பச்சனின் தங்கை ஸ்வேதா பச்சனின் மகனான அகஸ்தியானந்தா தி ஆர்ச்சீஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அந்தப் படத்தின் ப்ரீமியர் ஷோ போடப்பட்டது. அந்த திரையிடலுக்கு அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யார் ராய் ஜோடியாக ககலந்துகொண்டனர். இதன் மூலம் இருவரும் பிரிகிறார்கள் என்பதில் உண்மை இல்லை என ரசிகர்கள் சொல்ல ஆரமித்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X