twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐஸ்வர்யா ராயும் தமிழ் திரையுலகமும்..மணிரத்னம் அறிமுகப்படுத்திய நாயகி

    |

    சென்னை: பொன்னியின் செல்வனில் முக்கிய ரோலில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு தமிழ் திரையுலகம் ஒன்றும் புதிதல்ல. அவர் 25 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் கதாநாயகியாக நடித்துவிட்டார்.

    மணிரத்னத்தின் நாயகியாக ஐஸ்வர்யா பல படங்களில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராயை திரையுலகில் அறிமுகப்படுத்தியது மணிரத்னம் அந்த வகையில் அவர் ஐஸ்வர்யா ராயின் குரு என்றால் மிகையல்ல.

    பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரமான நந்தினி பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது அவரது திரையுலக வாழ்க்கையில் பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

     தமிழ் நடிகைகளை விட அழகாக தமிழ் வசனம் பேசும் ஐஸ்வர்யா ராய்..மணிரத்னம் பெருமிதம் தமிழ் நடிகைகளை விட அழகாக தமிழ் வசனம் பேசும் ஐஸ்வர்யா ராய்..மணிரத்னம் பெருமிதம்

     கர்நாடக பூர்வீகம் மும்பைவாசி ஐஸ்வர்யா ராய்

    கர்நாடக பூர்வீகம் மும்பைவாசி ஐஸ்வர்யா ராய்

    கர்நாடகாவின் பண்ட் குடும்பத்தைச் சேர்ந்த மும்பைவாசியான ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் உலக அளவில் பிரபலமானார். பின்னர் பல்வேறு விளம்பரங்கள், பிராண்ட் அம்பாசிடர் என வளம் வந்த ஐஸ்வர்யா ராயை முதன் முதலில் திரைத்துறையில் இழுத்துவந்தவர் மணிரத்னம் தான். தமிழக அரசியலை மையப்படுத்தி அவர் எடுத்த இருவர் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். (இது ஜெயலலிதாவின் வேடம் என்று சொல்லப்பட்டது)

     ஐஸ்வர்யா ராயை சினிமாவில் அறிமுகப்படுத்திய மணிரத்னம்

    ஐஸ்வர்யா ராயை சினிமாவில் அறிமுகப்படுத்திய மணிரத்னம்

    ஐஸ்வர்யா ராயின் முதல் திரையுலக பயணம் மணிரத்னம் எனும் பிரபல இயக்குநரால் அமைந்தது. அந்தப்படத்தில் ஒரு காட்சியில் 2 நிமிடம் ஒரே டேக்கில் ஐஸ்வரயா நடித்தார் என மணிரத்னம் பாராட்டினார். அவரிடம் 10, 15 டேக் வாங்கினேன் என்று ரஜினி சொல்லும்போது முதல் படத்தில் ஒரே டேக்கில் ஓக்கே ஆனார் ஐஸ்வர்யா என்றால் அவரது திறமையை எடைபோடலாம். 1997 ஆம் ஆண்டு தொடங்கிய அவரது கலைப்பயணம் இன்று வரை தொடர்கிறது.

     25 ஆண்டுகளுக்கு முன் தமிழில் அறிமுகம்

    25 ஆண்டுகளுக்கு முன் தமிழில் அறிமுகம்

    1997 ஆம் ஆண்டு இருவர் படத்தில் அறிமுகமானபின் ஐஸ்வர்யா ராய் இந்தி, பெங்காலி, ஹாலிவுட் படங்கள் என ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். மணிரத்னத்தின் இருவர் படத்துக்கு பின் 1999 ஆம் ஆண்டு ஜீன்ஸ் படத்தில் நடிக்க வைத்தார் இயக்குநர் ஷங்கர். அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி, அஜித்துடன் இணைந்து கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார்.

     தமிழில் அதிக படங்கள் நடித்த ஐஸ்வர்யா ராய்

    தமிழில் அதிக படங்கள் நடித்த ஐஸ்வர்யா ராய்

    ஐஸ்வர்யா ராய் இந்தி படங்களில் அதிகம் நடித்தாலும் அவரை அதிகம் இயக்கிய இயக்குநர்களில் மணிரத்னம் தான். ஐஸ்வர்யா ராயை வைத்து மணிரத்னம் 4 படங்களை இயக்கியுள்ளார். இருவர், ராவணன், குரு, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் ஆகும். தமிழில் ஐஸ்வர்யா நேரடியாக நடித்த படங்கள் மணிரத்னம் இயக்கத்தில் 3, ஷங்கர் இயக்கத்தில் 2, ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஒன்று என 6 படங்கள் இது தவிர குரு, தாளம் உள்ளிட்ட படங்களும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளது.

     5 ஆங்கில படங்கள்

    5 ஆங்கில படங்கள்

    ஆங்கில படங்கள் 5 படங்களில் ஐஸ்வர்யா நடித்துள்ளார். ப்ரைட் & பிரஜுடைஸ், தி மிஸ்ட்ரஸ் ஆஃப் தி ஸ்பைசஸ், ப்ரொவோக்ட், தி லாஸ்ட் லீஜியன், தி பிங்க் பேந்தர்-2 ஆகிய படங்கள் ஆகும். இதில் தி பிங்க் பேந்தர்-2 புகழ்பெற்ற ஹாலிவுட் படமாகும். ஐஸ்வர்யா ராய் 2010 ஆம் ஆண்டு ராவணன், எந்திரன் ஆகிய படங்களில் நடித்தார். அதன் பின்னர் 2012 ஆ ஆண்டுக்கு பின் நடிப்பதை நிறுத்தினார். இந்நிலையில் மணிரத்னம் மீண்டும் பொன்னியின் செல்வனில் நடிக்க வைத்துள்ளார்.

    English summary
    Aishwarya Rai, who plays the lead role in Ponni's Selvan, is no stranger to Tamil cinema. She acted as a heroine in Tamil 25 years ago. Aishwarya acted as Mani Ratnam's heroine in many films. Mani Ratnam introduced Aishwarya Rai to the film industry and in that sense he is not too much if he is Aishwarya Rai's guru. Aishwarya Rai's portrayal of the lead character Nandini in Ponni's Selvan is seen as a major milestone in her film career.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X