நடிகையாக்கிவிட்ட மணிரத்னத்தின் படம் மூலம் ஐஸ்வர்யா ராய் ரீ என்ட்ரி

By Siva

மும்பை: பிரசவத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் பச்சன் மணிரத்னம் இயக்கும் படத்தின் மூலம் திரையுலகில் மறுபிரவேசம் செய்யவிருக்கிறாராம்.

உலக அழகி பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஐஸ்வர்யா ராயை திரை உலகில் அறிமுகப்படுத்தி வைத்த பெருமை இயக்குனர் மணிரத்னத்தையே சேரும்.

மாடலாக, உலக அழகியாக இருந்த ஐஸ் மணிரத்னத்தின் படம் மூலம் நடிகை அவதாரம் எடுத்தார்.

இருவர்

இருவர்

1997ம் ஆண்டில் வெளியான இருவர் படத்தில் ஐஸ்வர்யா ராய் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் சேர்ந்து நடித்தார். மணிரத்னத்தின் சிறந்த படைபுகளில் ஒன்றாக இந்த படம் கருதப்படுகிறது.

பாலிவுட்

பாலிவுட்

இருவர் படத்தை அடுத்து ஐஸ்வர்யா ராயை பாலிவுட் கண்டுகொண்டு வாய்ப்புகள் அளித்தது. அங்கு அவர் முன்னணி நாயகிகளில் ஒருவராக ஆனார்.

தமிழில்

தமிழில்

இந்தி படங்களில் கவனம் செலுத்தினாலும் அவ்வப்போது வந்து தமிழ் படங்களிலும் நடித்துவிட்டுச் செல்வார். அவர் நடித்த ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் ஆகியவை ஹிட் படங்கள்.

மணிரத்னம்

மணிரத்னம்

ஐஸ்வர்யா மணிரத்னத்தின் குரு மற்றும் ராவணன் ஆகிய படங்களில் நடித்தார். இதில் குருவில் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து நடித்தார்.

திருமணம், குழந்தை

திருமணம், குழந்தை

ஆராத்யாவை பெற்ற பிறகு ஐஸ்வர்யா ராய் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். அவர் இந்த படத்தில் நடிக்கப் போகிறார் அந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்று மட்டும் அவ்வப்போது செய்திகள் வரும்.

விளம்பரம்

விளம்பரம்

ஐஸ் படத்தில் நடிக்காவிட்டாலும் விளம்பர படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதற்காக அவருக்கு கோடிக் கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

ஆராத்யா

ஆராத்யா

ஆராத்யா வளர்ந்துவிட்டாள். அவள் பிளே ஸ்கூல் போவதால் ஐஸ் மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். அவர் சஞ்சய் லீலா பன்சாலி அல்லது மணிரத்னத்தின் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது.

மீண்டும் மணி

மீண்டும் மணி

ஐஸ்வர்யா தன்னை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்த மணிரத்னத்தின் படத்தின் மூலம் தான் மீண்டும் நடிக்க வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X