2.0.. ஐஸ்வர்யா ராய் இருக்கார்.. ஆனா, இல்ல..!
2.0 வில் ஐஸ்வர்யா ராய் இருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னை: ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவில்லை என்றாலும், கதைப்படி அவர் ஒரு கதாபாத்திரமாக வருவது தெரிய வந்துள்ளது.
எந்திரன் பட வெற்றியைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.0. லைகா தயாரித்துள்ள இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் வில்லனாக நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்திருக்கிறார்.
இந்தப் படம் வரும் 29ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

கௌரவத் தோற்றம்:
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் எனக் கூறப்படும் இப்படத்தில், முதல் பாகத்தில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராய் கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார் என பட வேலைகள் ஆரம்பம் ஆன நாள் முதல் ஒரு செய்தி உலா வருகிறது. இதற்கு இந்நாள் வரை படக்குழு மறுப்பு தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தது. இதனால் ஐஸ்வர்யா ராய் நடிப்பதை படக்குழு சர்ப்பிரைசாக வைத்திருப்பதாகக் கூறப்பட்டது.

மலேசிய பஸ்:
இந்நிலையில், தற்போது 2.0 படத்தின் புரமோசன் வேலைகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதற்கென மலேசியாவில் சிறப்பு பேருந்தும் விடப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், 2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாரா என்பது குறித்தும் ஒரு நம்பத்தகுந்த தகவல் வெளியாகியுள்ளது.

2.0விலும் சனா:
அதாவது எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த சனா கதாபாத்திரம் 2.0விலும் இடம் பெற்றிருக்கிறதாம். ஆனால், இதற்காக ஐஸ்வர்யா ராய் புதிதாக கால்ஷீட் கொடுத்து நடித்துக் கொடுக்கவில்லை. ஏற்கனவே, எந்திரன் படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகளில், படத்தின் நீளம் காரணமாக குறைக்கப்பட்டவற்றை இதில் சேர்த்துள்ளாராம் ஷங்கர்.

கதாபாத்திரம்:
இதன்படி பார்த்தால் 2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார். ஆனால் கதாபாத்திரமாக இருக்கிறார். அவருக்கென புதிய காட்சிகள் இல்லை. ஆனால் அவர் வரும் காட்சிகள் இருக்கிறது. கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா. ஆம், 2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார், ஆனால் இல்லை.


Click it and Unblock the Notifications











