இந்தியாவில் மதம், சாதி, மொழி.. பிரதமர் மோடிக்கு முன் பேச்சில் ஃபயர் விட்ட ஐஸ்வர்யா ராய்!

மும்பை: ஐஸ்வர்யா ராய் பச்சன் மதம், சாதி, மொழி குறித்து பேசியது, அதுவும் பிரதமர் நரேந்திர மோடி முந்நிலையில் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், ஐஸ்வர்யா ராய் இந்தியாவில் சரியான மதம் மற்றும் சாதி எது என்பதை வெளிப்படையாகப் பேசுகிறார். தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி தலைமையிலான "இந்து ஜோடோ யாத்ரா" நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இந்த கருத்துக்களை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புட்டபர்த்தியில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், மதம், சாதி மற்றும் மனிதாபிமானம் குறித்துப் பேசியது அனைவரின் மனதையும் தொட்டது. அப்போது பிரதமர் மோடி அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர், ஐஸ்வர்யா ராய் அவரது கால்களைத் தொட்டு வணங்கினார்.

மக்கள் மத்தியில் உரையாற்றிய ஐஸ்வர்யா ராய், மனிதநேயம் மற்றும் மனிதாபிமானம் குறித்துப் பேசினார். அவர் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் உயர்த்திப் பேசவில்லை. இந்து, முஸ்லிம், சீக்கியர் அல்லது கிறிஸ்தவ மதம் என எதையும் குறிப்பிடாமல், இந்தியாவில் ஒரே ஒரு மதம் மற்றும் சாதி மட்டுமே உள்ளது என்று வலியுறுத்தினார்.

அவர் கூறியதாவது: "இங்கே ஒரே ஒரு மதம்தான் உள்ளது, ஒரே ஒரு இனம்தான் உள்ளது, அது மனிதநேயத்தின் மதம். இங்கே ஒரே ஒரு இனம்தான் உள்ளது, அது அன்பின் இனம். இங்கே ஒரே ஒரு மொழிதான் உள்ளது, அது இதயத்தின் மொழி. இங்கே ஒரே ஒரு கடவுள்தான் உள்ளார், அவர் எங்கும் நிறைந்தவர் என்று கூறினார். தனது உரையை முடிக்கும்போது சாய் ராம் ஜெய் ஹிந்த் என்று முடித்தார்.

Aishwarya Rai Bachchan Advocates Unity In Religion And Humanity infront Of PM Modi

இந்த வீடியோ வெளியானதிலிருந்து வேகமாகப் பரவி வருகிறது. ஐஸ்வர்யா ராயின் பேச்சுக்கு மக்கள் பரவலாக கைதட்டி வரவேற்பு அளித்துள்ளனர். இணையவாசி ஒருவர், "இவ்வளவு ஞானம் மிகச் சிலருக்கே இருக்கும்" என்று குறிப்பிட்டார். ஆம், நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் அன்பின் இந்த கருத்து எல்லா இடங்களிலும் செல்லுபடியாகாது என்று ஒருவர் கருத்து தெரிவித்தார். மேலும் எந்த மதம் அன்பைக் கற்றுக்கொடுக்கிறது? என்று மற்றொருவர் கேள்வி எழுப்பினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X