மணிரத்னமே அமைதியாய் இருக்கார்... ஆனா, நீங்க ரகசியத்தைப் போட்டு உடைச்சுட்டீங்களே ஐஸ்!

மணிரத்னம் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

Recommended Video

Actor Simbu Marriage - சிம்புவுக்கு கல்யாணம் முடிவாயிடிச்சு

சென்னை: மணிரத்னத்தின் படத்தில் நடிப்பதை கேன்ஸ் பட விழாவில் உறுதி செய்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

செக்கச் சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து, தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் மணிரத்னம். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படம் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக மணிரத்னம் அறிவிக்கவில்லை. ஆனால், தினந்தோறும் அப்படம் பற்றிய ஏதாவது செய்தி இணையத்தில் உலா வந்த வண்ணமே உள்ளன.

ஐஸ்வர்யா ராய்”

ஐஸ்வர்யா ராய்”

இந்நிலையில், மணிரத்னம் படத்தில் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார் ஐஸ்வர்யா ராய். கேன்ஸ் திரைப்பட விழாவில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். ஏன் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை என்ற கேள்விக்கு பதிலாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொறுப்பான தாய்:

பொறுப்பான தாய்:

மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், "நிஜ வாழ்க்கையில் ஒரு பொறுப்பான தாயாக நடந்து கொள்ள என் நேரத்தை செலவிட்டு வருகிறேன். நான் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறினால், நான் பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறேன் என மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அமைதியாக இருக்கிறேன்.

மணிரத்னம் படம்:

மணிரத்னம் படம்:

மணிரத்னம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத போது, இந்த செய்தி வெளியில் கசிந்து விட்டது. அவர் படத்தில் நான் வேலை செய்வது உண்மை தான். என் குருவுடன் வேலை செய்வதில் எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி தான்.

படப்பிடிப்பு:

படப்பிடிப்பு:

நான் உற்சாகமாக, ஆர்வமாக, மகிழ்ச்சியுடன் பணியாற்றுவேன். இந்த வருடத்தின் இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும்" என்று தெரிவித்தார். இதன் மூலம் அவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் தான் நடிக்க இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. அதோடு, இந்த ஆண்டின் இறுதியில் மணிரத்னம் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருப்பதும் உறுதியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X