twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழில் மீண்டும் நடிப்பேன்- ஐஸ்வர்யா ராய்

    By Mayura Akilan
    |

    சென்னை: நல்ல கதை அமைந்தால் தமிழ் படத்தில் மீண்டும் நடிப்பேன் என்று நடிகை ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

    மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு பெற்றோரும் ஸ்டெம் செல்லை தானமாக தர முன்வர வேண்டும் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறினார்.

    ரத்த அணுக்கள் தொடர்பான பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் ஸ்டெம் செல் முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தை பிறந்த 10 நிமிஷத்துக்குள் அதன் தொப்புள் கொடியிலிருந்து ஸ்டெம் செல்லை எடுத்து அதனை பிரத்யேகமாக பாதுகாப்பதன் மூலம், எதிர்காலத்தில் அந்தக் குழந்தையோ, அதன் உறவினர்களோ ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட ரத்த அணுக்கள் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஸ்டெம் செல்லைக் கொண்டு எளிதில் சிகிச்சை அளிக்க முடியும்.

    இதனைக் கருத்தில் கொண்டு, இந்திய அளவில் கடந்த 10 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட ஒரு லட்சம் ஸ்டெம் செல் அலகுகளை (யூனிட்) லைப்ஃசெல் எனும் நிறுவனம் பிரத்யேகமாகப் பாதுகாத்து வருகிறது.

    ஐஸ்வர்யா ராய்

    ஐஸ்வர்யா ராய்

    இந்நிலையில் ஸ்டெம் செல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னையில், ஸ்டெம் செல் வங்கியை லைப்ஃசெல் நிறுவனம் துவங்கியது. இதனை பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் துவக்கி வைத்தார்.

    ஸ்டெம்செல் தானம்

    ஸ்டெம்செல் தானம்

    இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் பேசுகையில், நான் கர்ப்பமாக இருந்தபோது லைஃப்செல் நிறுவனத்தினர், ஸ்டெம் செல் தானம் தொடர்பாக என்னை அணுகினர். நான் எனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்து, தொப்புள்கொடி ஸ்டெம் செல்லை தானமாகத் தர முடிவு செய்தேன்.

    விழிப்புணர்வு அவசியம்

    விழிப்புணர்வு அவசியம்

    இதன் மருத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு பெற்றோரும் ஸ்டெம் செல்லை தானமாக தர முன்வர வேண்டும் என்று கூறினார்.

    மகளுடன்வ வந்த ஐஸ்

    மகளுடன்வ வந்த ஐஸ்

    சென்னை அனல் ஐஸ்வர்யாவுக்கு ரொம்ப பிடிக்குமாம்.எனவே தனது மகளுடன் வந்திருந்தார்.

    தமிழில் நடிப்பேன்

    தமிழில் நடிப்பேன்

    தமிழில் நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார். எந்திரன் 2வில் நடிக்க தயார் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றுள்ளார் ஐஸ்.

    English summary
    Bollywood actor Aishwarya Rai Bachchan on Sunday reiterated the importance of stem cell banking by mothers and the situation that led to her decision to go in for stem cell banking for her daughter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X