ஐஸ்வர்யா ராய் 'ஹேப்பி அனிவர்சரி' மூலம் மீண்டும் நடிக்க வரலையா?
மும்பை: ஐஸ்வர்யா ராய் ஹேப்பி அனிவர்சரி படத்தில் நடிப்பது உறுதியாகவில்லை என்று அவரின் கணவர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் பிரசவத்திற்கு பிறகு நடிக்கவில்லை. அவர் கடைசியாக கடந்த 2010ம் ஆண்டில் வெளியான குஜாரிஷ் படத்தில் தான் நடித்தார். பிள்ளை பெற்ற பிறகு ஐஸ்வர்யாவின் உடல் சற்று பருத்துவிட்டது. இதையடுத்து அவர் உடல் எடையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறார்.
இந்நிலையில் தான் அவர் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து ஹேப்பி அனிவர்சரி படம் மூலம் திரை உலகில் மறுபிரவேசம் செய்கிறார் என்று செய்திகள் வெளியாகின.

உறுதி இல்லை
ஹேப்பி அனிவர்சரி படத்தில் ஐஸ்வர்யா நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவர் இந்த படத்தில் நடிப்பதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை என்று அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

கதையையே முழுசா கேட்கவில்லை
தாங்கள் இன்னும் படத்தின் கதையையே முழுதாக கேட்கவில்லை என்றும், இனி தான் திரைக்கதையை படித்துப் பார்க்க வேண்டும் என்றும் கூறினார் அபிஷேக்.

நாங்க முடிவு செய்யணும்
ஹேப்பி அனிவர்சரி படத்தில் நடிக்க என்னையும், ஐஸையும் அணுகினார்கள். ஆனால் அதில் நடிப்பதை நாங்கள் முடிவு செய்ய வேண்டும். அதன் பிறகே அறிவிப்பு வெளியிடப்படும் என்றார் அபிஷேக்

ரசிகர்கள் ஏமாற்றம்
ஜஸ்வர்யா மீண்டும் நடிக்க வருகிறார் என்று நினைத்து மகிழ்ந்த ரசிகர்களுக்கு அபிஷேக்கின் வார்த்தைகள் கவலை அளித்துள்ளன.


Click it and Unblock the Notifications











