அல் பசினோவாவை விட என் மகள்தான் முக்கியம்.. ஐஸ்வர்யா ராய்
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அல் பசினோவை சந்திக்கும் வாய்ப்பை நிராகரித்து விட்டு தனது மகளுடன் நேரத்தைக் கழித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
ஐஸ்வர்யா ராய் இப்போது முன்பை விட ரொம்ப பிசி - நடிப்பதில் அல்ல, தனது மகளுடன் நேரத்தைக் கழிப்பதில். மகள் ஆரத்யாவை விட்டு ஒரு நொடிகூட விலகாமல் கூடவே இருக்கிறாராம் ஐஸ்வர்யா.
தனது மகளுடன் இருப்பதற்காக தனக்கு ரொம்பப் பிடித்த ஹாலிவுட் ஹீரோ அல் பசினோவை கூட இரண்டாம்பட்சமாக கருதி அவருடனான சந்திப்பை நழுவ விட்டுள்ளார் ஐஸ்வர்யா.

லண்டனில் கேம்ப்
கணவர் அபிஷேக் பச்சன், அம்மா விருந்த ஆகியோருடன் லண்டனுக்குப் போயிருந்தார் ஐஸ்வர்யா - கூடவே குட்டிப் பாப்பா ஆரத்யாவும்.

திடீரென ஊருக்குக் கிளம்பிய விருந்தா
இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் அம்மா விருந்தா ஜூன் 2ம் தேதி திடீரென ஊருக்குக் கிளம்பி விட்டார்.

பசினோ சந்திப்பு போச்சே
அன்றைய தினம் பார்த்து அல் பசினோவை சந்திக்கும் வாய்ப்பு ஐஸ்வர்யா, அபிஷேக்குக் கிடைத்தது.

ஆரத்யாவைப் பார்க்க ஆள் இல்லை
ஆனால் ஆரத்யாவை யாரிடம் விட்டுச் செல்வது என்ற குழப்பம்.

அப்பாவுக்கு பசினோ ஆசை
அபிஷேக் பச்சனுக்கோ அல் பசினோவை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்று கொள்ளை ஆசையாம்..

அம்மாவுக்கு பாப்பாதான் முக்கியம்...
ஆனால் அம்மா ஐஸ்வர்யாவோ, ஆரத்யாவை தனியாக யாரிடமாவது விட்டுச் செல்ல விருப்பம் இல்லை.

பசினோ சந்திப்பு கேன்சல்
இதனால் இருவரும் போக முடியாத நிலை. தனது மகளுக்காக பசினோவை சந்திக்கும் திட்டத்தைக் கைவிட்டார் ஐஸ்வர்யா.
அம்மான்னா சும்மாவா....


Click it and Unblock the Notifications











