ஐஸ்வர்யா ராயும், மாமியாரும் ராசியாகிவிட்டார்களா?
Recommended Video

மும்பை: ஐஸ்வர்யா ராய் செய்த செயலால் அவரை பார்த்து ரசிகர்கள் வியக்கிறார்கள்.
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரின் மாமியாரான நடிகை ஜெயா பச்சனுக்கும் ஆகவே ஆகாது என்று பல ஆண்டுகளாக பேசப்படுகிறது. ஐஸ்வர்யா தனது மகள் ஆராத்யாவை ஜெயா அருகில் கூட செல்லவிட மாட்டாராம்.
மகளை பார்த்துக் கொள்ள தனது அம்மாவை தன்னுடன் வைத்துள்ளாராம் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா
மாமியார் மட்டும் அல்ல நாத்தனார் ஸ்வேதா நந்தாவையும் ஐஸ்வர்யா ராய்க்கு பிடிக்காது என்று கூறப்படுகிறது. அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்வேதாவும், ஐஸ்வர்யாவும் ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு இருந்தார்கள்.

ஜெயா
பாலிவுட் நடிகை ஷம்மி காலமானார். அவரின் இறுதிச் சடங்கில் ஐஸ்வர்யா ராய் தனது மாமியார் ஜெயாவுடன் கலந்து கொண்டார். அப்போது ஐஸ்வர்யா ஜெயாவை கட்டிப்பிடித்தார்.

பாசம்
ஐஸ்வர்யா ஜெயா பச்சனை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. இதன் மூலம் மாமியார், மருமகள் பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று நம்பப்படுகிறது.

ட்விட்டர்
மகளிர் தின வாழ்த்து தெரிவித்து ட்வீட்டிய அமிதாப் பச்சன் தனது மனைவி, மகள், பேத்திகள் புகைப்படங்களை வெளியிட்டு மருமகள் ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை மட்டும் போடவில்லை. இது ரசிகர்களை அதிருப்தி அடைய செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











