என்ன சொல்றீங்க 766 கோடியா? ஐஸ்வர்யா ராய் அப்படி என்ன சொத்துக்கள் வச்சிருக்காங்க தெரியுமா?
மும்பை: பொன்னியின் செல்வன் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்திழுக்கப் போகும் ஐஸ்வர்யா ராய் தற்போது இந்தியா சார்பாக கேன்ஸ் திரைப்பட விழாவை அலங்கரித்து வருகிறார்.
48 வயதிலும் அதே இளமை மாறாத அழகுடன் அசத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராய்.
ஆரம்பத்தில் வெறும் 1500 ரூபாய் சம்பளத்தை மாடலிங்கில் வாங்கி உள்ள ஐஸ்வர்யா ராயின் தற்போதைய சொத்து மதிப்பை கேட்டால் தலையே சுற்றி விடும். ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு மற்றும் அவரிடம் உள்ள காஸ்ட்லியான பங்களாக்கள் மற்றும் விலையுயர்ந்த சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை பற்றி இங்கே பார்ப்போம்.

உலக அழகி
1973ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி கர்நாடகாவின் மங்களூருவில் பிறந்த ஐஸ்வர்யா ராய் 1994ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். நீ என்ன பெரிய ஐஸ்வர்யா ராயா என ஏகப்பட்ட தமிழ் படங்களிலேயே வசனங்கள் வரும் அளவுக்கு அவரது வளர்ச்சி உயர்ந்தது. 1997ம் ஆண்டு இருவர் படத்தில் ஐஸ்வர்யா ராயை ஹீரோயின் ஆக்கினார் இயக்குநர் மணிரத்னம்.

இருவர் முதல் பொன்னியின் செல்வன் வரை
இருவர் படத்தில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய் ஷங்கரின் ஜீன்ஸ், ராஜிவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மணிரத்னத்தின் குரு, ராவணன் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் என குறிப்பிடத்தக்க தமிழ் படங்களில் நடித்துள்ளார். மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திலும் ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரமான நந்தினி தேவி மற்றும் மந்தாகினி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கேன்ஸ் 2022
கடந்த 2003ம் ஆண்டு முதல் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்று வருகிறார். கேன்ஸ் 2022 திரைப்பட விழாவிலும் கலந்து கொண்டு ரெட் கார்ப்பெட்டில் வித விதமான கவர்ச்சி உடைகளை அணிந்து செம ராயலாக நடைபோட்டு பலரது கவனத்தையும் கவர்ந்தார் ஐஸ்வர்யா ராய்.

வெறும் 1500 ரூபாய்
மாடலிங் உலகில் கால் பதித்த நிலையில், ஆரம்பத்தில் வெறும் 1,500 சம்பளத்துடன் வேலை பார்த்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். ஆனால், தற்போது அவர் ஒரு விளம்பர படத்தில் நடித்தால் கூட பல கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளன.

766 கோடி சொத்து
1997ம் ஆண்டு முதல் 2022 வரை 48 வயதிலும் லீடு ரோலில் நடித்து அசத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராய். தமிழ், இந்தி, வங்காளம் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு 100 மில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 766 கோடி ரூபாய் என்கின்றனர்.

ஒரு நாள் சம்பளம்
நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரு நாள் நடிக்க 6 முதல் 7 கோடி ரூபாயை சம்பளமாக விளம்பர படங்களுக்கு வாங்கி வருவதாகவும், திரைப்படங்களில் நடிக்க 10 முதல் 12 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாகவும், ஆண்டுக்கு 80 முதல் 90 கோடி வரை அவர் சம்பாதித்து வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

சொகுசு பங்களா
அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை மணந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் மும்பையில் 112 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களாவில் வாழ்ந்து வருகிறார். பாந்த்ராவில் 21 கோடி ரூபாய் மதிப்பில் ஐஸ்வர்யா ராய்க்கு தனி பங்களாகவே இருக்கிறதாம். மேலும், துபாயில் உள்ள ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்டில் அவருக்கு சொகுசு வில்லா ஒன்றும் இருக்கிறதாம்.

சொகுசு கார்கள்
நடிகர் விஜய் வைத்திருப்பது போல ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். அதன் மதிப்பு 7.95 கோடி ரூபாய். மேலும், 1.60 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ், 1.58 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடி ஏ8எல் கார், 2.33 கோடி மதிப்புள்ள லெக்சஸ் எல் எக்ஸ் 570 மற்றும் 1.98 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் எஸ்500 உள்ளிட்ட ஏகப்பட்ட சொகுசு கார்களும் உள்ளனவாம்.

மீண்டும் ரஜினி உடன்
பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 169 படத்திலும் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் தான் நடிக்கப்போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கூடிய விரைவிலேயே தனது சொத்து மதிப்பை 1000 கோடிக்கு கொண்டு சென்றுவிடுவார் ஐஸ்வர்யா ராய் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











