பொன்னியின் செல்வன்...ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட அசத்தல் அப்டேட்
டெல்லி : டைரக்டர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் ஃபஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. நீண்ட போர் வாள், சிங்க முக முத்திரையுடன் வெளியாகி உள்ளது இந்த ஃபஸ்ட்லுக்.
இரண்டு பாகங்களாக உருவாக்கப்படும் இந்த படம் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இதில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஜெயம் ரவி, ஐஸ்வர்ய லட்சுமி. ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

பொற்காலம் வந்து விட்டது
லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட படத்தில் ஐஸ்வர்யா ராயும் நடித்து வருகிறார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் போஸ்டரை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய், வாழ்வில் பொற்காலம் வந்து விட்டது என குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யாவின் 4 வது படம்
மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் 4வது படம் இது. இதற்கு முன் 1997 ல் ஐஸ்வர்யாவின் முதல் தமிழ் படமான இருவர், 2007 ல் குரு, 2010 ல் ராவணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இதில் குரு மற்றும் ராவணன் படங்களில் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்திருப்பார்.

பிஸியான ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ராய் கடைசியாக 2018 ல் அனில் கபூர், ராஜ்குமார் ராவ் ஆகியோருடன் இணைந்து Fanney Khan படத்தில் நடித்திருந்தார். இது பாக்ஸ் ஆபீசில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அடுத்த படியாக அபிஷேக் பச்சனுடன் இணைந்து குலாப் ஜாமுன் படத்தில் நடிக்க உள்ளார்.

நானும் இருக்கேன்ப்பா
தற்போது பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் தான் நடிப்பதை உறுதி செய்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இதுவரை இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாரா இல்லையா என்ற குழப்பம் இருந்து வந்தது. ஆனால் தான் அந்த படத்தில் நடித்து வருவதை உறுதி செய்து அப்டேட் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா.

போஸ்டரை வைரலாக்கிய நட்சத்திரங்கள்
ஐஸ்வர்யா ராய் மட்டுமல்ல இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஃபஸ்ட்லுக் போஸ்டரை தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, அத்துடன், "The golden era comes to life. Mani Ratnam's Ponniyin Selvan PS1" என குறிப்பிட்டுள்ளனர்.
பொன்னியின் செல்வம் நட்சத்திரங்கள் பகிர்ந்துள்ள இந்த போஸ்டர் தாறுமாறாக வைரலாகி வருகிறது. அனைவரின் பதிவும் ஆயிரக்கணக்கில் லைக்குகளை பெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications











