»   »  குடும்ப பிரச்சனையால் ஐஸ்வர்யா ராய் தற்கொலை: தீயாக பரவிய வதந்தி

குடும்ப பிரச்சனையால் ஐஸ்வர்யா ராய் தற்கொலை: தீயாக பரவிய வதந்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதை அவரது குடும்பத்தார் மறைத்துவிட்டதாகவும் வதந்தி பரவியது.

ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஐஸ்வர்யா ராய் ரன்பிர் கபூருடன் நெருக்கமாக நடித்ததால் அவரது வீட்டில் பிரச்சனை வெடித்தது என்று கூறப்பட்டது. மேலும் பத்திரிகை ஒன்றுக்கும் ஐஸும், ரன்பிரும் மிகவும் நெருக்கமாக கொடுத்த போஸ்களாலும் அவரின் குடும்ப வாழ்க்கையில் புயல் வீசியதாக தகவல்கள் வெளியாகின.

Aishwarya Rai becomes victim of death rumours

இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக ஐஸ்வர்யா ராய் அளவுக்கு அதிகமாக தூக்க மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அதை அவரது குடும்பத்தார் வெளியுலகிற்கு தெரியாமல் மறைத்துவிட்டதாகவும் ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

முன்னதாக ஐஸ்வர்யாவின் மாமனாரும், நடிகருமான அமிதாப் பச்சன் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. இது போன்ற வதந்தியில் சிக்கிய முதல் நடிகை ஐஸ்வர்யா கிடையாது.

இளம் நடிகை கத்ரீனா கைஃப் இறந்துவிட்டதாகக் கூட வதந்தி பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Aishwarya Rai's death rumours were doing rounds on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil