ஐஸ்வர்யா ராய் குழந்தைக்கு பெயர் 'ஆராத்யா பச்சன்'!

ஐஸ்வர்யா ராய் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்படும் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். இதுகுறித்து தங்களுக்கு ஆலோசனை சொல்லுமாறு ரசிகர்களையும் அமிதாப் குடும்பத்தினர் கேட்டு வந்தனர்.
இந்த நிலையில், பிறந்து நான்கு மாதங்கள் கழித்து குழந்தைக்கு 'ஆராத்யா பச்சன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆராத்யா என்றால் மரியாதைக்குரிய, வழிபாட்டுக்குரிய என்று அர்த்தமாம்.
ஆங்கிலத்தில் (Aa) என்று தொடங்கும்படியாக பெயர் இருக்க வேண்டும் என்று அமிதாப் குடும்பத்தினர் விரும்பியதால், பொருத்தமான பெயரை தேர்வு செய்ய இத்தனை நாள் காத்திருந்தனர்.
'பேட்டி பி' என்று மீடியாக்களால் அழைக்கப்பட்டு வந்த குழந்தைக்கு அபிலாஷா என்று பெயரிடப்பட்டதாக முதலில் தகவல்கள் வந்தன.


Click it and Unblock the Notifications











