சொல்லச்சொல்லக் கேட்காமல் ஐஸ்வர்யா ராயை அழ வைத்த புகைப்படக்காரர்கள்!

By Vignesh Selvaraj

Recommended Video

சொல்லச்சொல்லக் கேட்காமல் ஐஸ்வர்யா ராயை அழ வைத்த புகைப்படக்காரர்கள்!- வீடியோ

மும்பை : ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் 6-வது பிறந்தநாள் அண்மையில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஷாருக்கான், ஷில்பா ஷெட்டி என பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நேற்று, ஐஸ்வர்யா மற்றும் அவரது மகள் இருவரும், உதடு பிளவுபட்ட 100 குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவும் வகையில் Smile Train Foundation எனும் தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளைப் பார்க்க சென்றுள்ளனர். ஐஸ்வர்யா ராய் வருவதை அறிந்த பத்திரிக்கையாளர்களும் அங்கு செல்ல மிகவும் மோசமான சூழல் நிலவியிருக்கிறது.

Aishwarya rai burst into tears

அங்கிருந்த குழந்தைகள் அனைவரும் புகைப்படக்காரர்களின் கூச்சலால் கொஞ்சம் கஷ்டப்பட்டுள்ளனர். இதனைப் பார்த்த ஐஸ்வர்யா பத்திரிக்கையாளர்களை புகைப்படம் எடுக்க வேண்டாம், குழந்தைகள் பயப்படுகிறார்கள் என்று சிலமுறை கூறியுள்ளார்.

இது சினிமா தொடர்பான நிகழ்ச்சி அல்ல. இங்கே புகைப்படங்கள் எடுக்கவேண்டாம் எனவும் கூறியுள்ளார். ஆனால், ஐஸ்வர்யா ராய் சொல்வதை யாரும் கேட்பதாக இல்லை. தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்திருக்கின்றனர்.

Aishwarya rai burst into tears

அந்த நிமிடத்தில் இருந்த சூழலைப் பார்த்த ஐஸ்வர்யா ராய் அனைவரின் முன்னிலையிலும் கண் கலங்கியுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X