Ponniyin Selvan 2: சென்னை தியேட்டரில் ஐஸ்வர்யா ராய்.. சியானை பார்த்ததும் செம கட்டிப்பிடி வைத்தியம்!
சென்னை: பொன்னியின் செல்வன் முதல் நாள் காட்சியை வடபழனியில் உள்ள பலாஸோ தியேட்டரில் சியான் விக்ரம், த்ரிஷா, ஜெயராம் உள்ளிட்ட பிரபலங்கள் ரசிகர்களுடன் கண்டு ரசித்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமையான இன்று சென்னைக்கு வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் படக்குழுவினருடன் படத்தை பார்த்து ரசித்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
சியான் விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, ஜெயம் ரவியின் மனைவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா ராய் மகள், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலரும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்தனர்.

சென்னையில் படம் பார்த்த ஐஸ்வர்யா ராய்: பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி மற்றும் ஊமை ராணி என டபுள் ரோலில் நடித்து ரசிகர்களை தனது அழகாலும் நடிப்பாலும் மயக்கி உள்ளார் ஐஸ்வர்யா ராய்.
பொன்னியின் செல்வன் நாவலிலேயே நந்தினி கதாபாத்திரத்துக்கு கல்கி கொடுத்த முக்கியத்துவத்தை விட மணிரத்னம் அதிகமாகவே முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இந்நிலையில், அந்த படத்தை சென்னையில் ரசிகர்களுடன் இன்று பார்த்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
மகளுடன் தியேட்டருக்கு வந்த ஐஸ்: சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவின் உடல்நிலை பற்றி தவறான வதந்திகளை பரப்பிய யூடியூப் சேனல்களுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆராத்யா வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி அந்த வீடியோக்களை நீக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், அம்மா நடிப்பில் அசத்தி உள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தை சென்னையில் பார்க்க அம்மாவுடன் கிளம்பி வந்து விட்டார் ஆரத்யா. ஆரத்யாவை பார்த்த உடனே சியான் விக்ரம் கட்டியணைத்து வரவேற்ற வீடியோ காட்சிகள் ரசிகர்களை வியக்க வைத்துள்ளன.
சியானை பார்த்ததும் கட்டியணைத்த ஐஸ்வர்யா ராய்: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ராவணன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் பொன்னியின் செல்வன் 2 படத்தில் சியான் விக்ரம் உடன் இணைந்து நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
குடும்ப ரீதியாகவே நண்பர்களாக வலம் வரும் இருவரும் நேரில் சந்தித்த நிலையில், உனக்காகத் தான் ஐஸ் நாங்க காத்திருக்கிறோம் என சியான் தியேட்டர் வளாகத்தில் சொல்ல, அய்யோ மன்னிச்சுடுங்க என சொல்லிக் கொண்டே சியான் விக்ரமை ஓடி வந்து கட்டியணைத்த காட்சிகள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றன.

ஜெயம் ரவி மனைவியுடன்: பொன்னியின் செல்வன் டைட்டில் ரோலில் நடித்த ஜெயம் ரவி தனக்கு வரவேண்டிய மணிமகுடத்தையும் கடைசி நேரத்தில் மதுராந்தகனுக்கு தூக்கிக் கொடுக்கும் நிலையில், ரசிகர்கள் அவரது கதாபாத்திரத்தை பாராட்டி வருகின்றனர்.
மேலும், இடைவேளையின் போது வரும் கூஸ்பம்ப்ஸ் காட்சி தான் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு வேறலெவல் வரவேற்பை கொடுத்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் திரையிடப்பட்ட செலிபிரிட்டி ஷோவை ஜெயம் ரவி தனது மனைவி உடன் வந்து பார்த்துள்ளார். ஜெயம் ரவியை பார்த்த ஐஸ்வர்யா ராய் அவரையும் ஹக் செய்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.
த்ரிஷா செம அழகு: ஐஸ்வர்யா ராயும் த்ரிஷாவும் ஆன் ஸ்க்ரீனில் தான் அழகு பதுமைகளாக ரசிகர்களை வசீகரிக்கின்றனர் என்று பார்த்தால் ஆஃப் ஸ்க்ரீனிலும் போட்டிப் போட்டு மிஸ் வேர்ல்ட்டா, மிஸ் சென்னையா யாரு பெஸ்ட்டுன்னு பார்ப்போம் என ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











