அந்த விஷயத்தில் மட்டும் ஐஸ்வர்யா ராய்க்கு தைரியம் இல்லை: மாமனார் அமிதாப்
Recommended Video

மும்பை: ஒரேயொரு விஷயத்தில் மட்டும் ஐஸ்வர்யா ராயும், தன் மகள் ஸ்வேதாவும் தலையிட விடுவது இல்லை என்று அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் உயர்ந்த மனிதன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். அவர் வேட்டி, சட்டையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

ஆராத்யா
எனக்கு என் பேத்திகள் நவ்யா, ஆராத்யா, பேரன் அகஸ்தியா ஆகியோரை மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு நான் செல்லம் கொடுப்பதை அவர்களின் பெற்றோர்கள் கூட எதிர்த்துக் கேட்க தயங்குவார்கள். என் செல்லங்களுக்கு நான் அப்படித் தான் செல்லம் கொடுப்பேன் என்கிறார் அமிதாப்.

லேப்டாப்
ஆராத்யா எப்பொழுதுமே நான் வேலைக்காக பயன்படுத்தும் மேஜையை வந்து ஏதாவது செய்வார். பேனா வேண்டும், லேப்டாப் வேண்டும் என்று வருவார். அவர் அப்படி செய்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ராய் மருமகளாக வந்ததால் ஏதாவது மாறிவிட்டதா என்று அமிதாபிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், எதுவும் மாறவில்லை. ஒரு மகள் வெளியே சென்று மற்றொரு மகள் வந்தார் என்றார்.

சினிமா
என் காலத்தில் செட்டில் இரண்டு பெண்கள் தான் இருப்பார்கள். ஒன்று ஹீரோயின், மற்றொன்று அம்மா. ஆனால் தற்போது இளம்பெண்கள் சினிமாவின் பல்வேறு துறைகளில் வேலை செய்வதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் அமிதாப்.


Click it and Unblock the Notifications











