ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே.. களைகட்டும் கான்ஸ் திரைப்பட விழா.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

கான்ஸ்: பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 75வது சர்வதேச திரைப்பட விழாவான கான்ஸ் திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் முதல் முறையாக கான்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

Recommended Video

Red Carpet வரவேற்பு... கெத்தாக கலந்துகொண்ட இந்திய சினிமா பிரபலங்கள் |Filmibeat Tamil

கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள நடிகைகள் தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் பிரான்ஸ் சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

கான்ஸ் திரைப்பட விழா

கான்ஸ் திரைப்பட விழா

75வது சுதந்திரத்தை கொண்டாடி வரும் இந்தியாவை சிறப்பிக்கும் விதமாக கான்ஸ் திரைப்பட விழா இந்த ஆண்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் இந்த ஆண்டு தமிழ் உள்ளிட்ட இந்திய திரைப்படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. மேலும், அதிகப்படியான தமிழ் நடிகர்களும், இந்திய நடிகர்களும் இவ்விழாவில் பங்கேற்றுள்ளனர்.

ராக்கெட்டரி ரிலீஸ்

ராக்கெட்டரி ரிலீஸ்

கான்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் மாதவன் முதன்முறையாக இயக்கி நடித்துள்ள ராக்கெட்டரி திரைப்படம் வெளியாகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் சென்றுள்ள நடிகர் மாதவன் அங்கிருந்து போட்ட குட் மார்னிங் புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. நடிகர் சூர்யாவும் ராக்கெட்டரி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரவின் நிழல் ரிலீஸ்

இரவின் நிழல் ரிலீஸ்

மாதவன் படம் மட்டுமல்ல நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள உலக சாதனை படைத்திருக்கும் இரவின் நிழல் - சிங்கிள் ஷாட் படமும் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பார்த்திபன் உள்ளிட்ட பிரபலங்கள் இதற்காக கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இயக்கிய Le Musk படமும் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

தீபிகா படுகோன் ஸ்டன்னிங்

தீபிகா படுகோன் ஸ்டன்னிங்

கான்ஸ் திரைப்பட விழாவில் நடுவராக இருக்கும் பொறுப்பு நடிகை தீபிகா படுகோனுக்கு வழங்கப்பட்டுள்ளது. கான்ஸ் திரைப்பட விழாவிற்காக பிரான்ஸ் பறந்துள்ள தீபிகா படுகோன் கட்டம் போட்ட கிளிட்டர் உடையில் மின்னும் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

ரெட்கார்ப்பெட்டில் ஐஸ்வர்யா ராய்

ரெட்கார்ப்பெட்டில் ஐஸ்வர்யா ராய்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மட்டுமின்றி நடிகை ஐஸ்வர்யா ராயும் கான்ஸ் திரைப்பட விழாவின் ரெட்கார்ப்பெட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அங்கே க்ளிக் செய்யப்பட்ட அவரது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராயை விரைவில் தமிழ் சினிமா ரசிகர்கள் கண்டு ரசிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவர் 169 படத்திலும் ஐஸ்வர்யா ராய் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பூஜா ஹெக்டேவும் வந்தாச்சு

பூஜா ஹெக்டேவும் வந்தாச்சு

பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் நகரில் பிரம்மாண்டமாக இன்று மே 17ம் தேதி தொடங்கும் இந்த கான்ஸ் திரைப்பட விழா வரும் மே 28ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகை பூஜா ஹெக்டேவும் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

பா. ரஞ்சித் பயணம்

பா. ரஞ்சித் பயணம்

கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இயக்குநர் பா. ரஞ்சித்தும் பிரான்ஸ் நாட்டுக்கு பயணப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையில் இந்திய சினிமா பிரபலங்கள் கான்ஸ் திரைப்பட விழாவில் அணிவகுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா எங்கே

நயன்தாரா எங்கே

நயன்தாராவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என அறிவிப்புகள் வெளியாகி இருந்த நிலையில், நயன்தாரா எங்கே என்றும் எப்போது பிரான்ஸ் நாட்டுக்கு செல்வார் என்றும் அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொள்வது சினிமா ரசிகர்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X