அந்த விஷயத்தில் அபிஷேக் பச்சன் எப்படி.. கணவருடனான உறவு குறித்து ஓபனா பேசிய ஐஸ்வர்யா ராய்!
மும்பை: கணவருடனான உறவு குறித்து நடிகை ஐஸ்வர்யா ராய் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி உள்ளார்.
இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். இவர் 1994 ஆம் ஆண்டு தனது 21 வயதில் மிஸ் வேர்ல்ட் என்ற பட்டத்தை பெற்றவர்.
மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வந்த இவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து இன்று வரை டாப் நடிகையாகவே இருக்கிறார்.

அடிக்கடி சர்ச்சையில் சிக்கினார்: ஐஸ்வர்யா ராயின் கவர்ந்து இழுக்கும் கண், வனப்பு, நிறம் சொக்கவைக்கும் அழகு சினிமாவில் அவரை உச்சம் தொடவைத்தது. அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்பார். அதுவும் நடிகையாகி விட்டால், எளிதாக அவரை ஆபத்தும், சர்ச்சையும் சூழல, இவர் அடிக்கடி காதல் சர்ச்சையில் சிக்கி துவண்டு போனார்.
சல்மான் கானுடன் காதல்: நடிகை ஐஸ்வர்யாவும், சல்மான் கானும் இணைந்து 'ஹம் தில் தே சுகே சனம்' என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்தனர். ஒன்றிரண்டு படத்தில் நடித்தாலே காதல் வந்துவிடும் தொடர்ந்து இருவரும் பல படங்களில் நடித்தால், ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் ரியல் ஜோடியாக மாற நினைத்தனர்.
அபிஷேக் பச்சனுடன் காதல்: ஆனால், அந்த காதல் பிரேக் அப்பாகி விட, 2007ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இந்த இத்தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அண்மையில் இவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்த விஷயத்தில்: இந்நிலையில்,நடிகை ஐஸ்வர்யா ராய் அளித்துள்ள பேட்டி ஒன்றில், உடலுறவு என்பது இரண்டு பேரின் காதல் வெளிப்படையாக மட்டும்தான் இருக்க வேண்டும். அது வெறும் உடம்பு மட்டும் இணைவதாகவோ, சும்மா ஜாலிக்காகவோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே நடக்கக்கூடாது. இரு மனம் ஒன்று சேர்ந்து பெருக்கெடுத்து ஓடும் காதலாகவே அந்த நிகழ்வு இருக்க வேண்டும். அந்த நேரத்தில் என் கணவருடன் காதலை கொண்டாடுவதுதான் எனக்கு பிடிக்கும் என ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











