Aishwarya Rai Divorce: பல வருஷமா பிரச்சனை.. அபிஷேக் பச்சன் வீட்டை விட்டே வெளியேறிய ஐஸ்வர்யா ராய்?

மும்பை: இந்திய திரையுலகின் மூத்த சூப்பர்ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகனை நடிகை ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்துக் கொண்டு பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நிலையில், தற்போது அபிஷேக் பச்சனை அவர் பிரிந்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆரம்பத்தில் இது வெறும் வதந்தி என்றே ரசிகர்கள் நம்பி வந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் வீட்டை விட்டே வெளியேறி விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

Aishwarya Rai has moved out from Abishek Bachchans house makes bollywood fans shock

உலக அழகியான ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதியினருக்கு ஆரத்யா எனும் வயதுக்கு வந்த மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அழகி: 1973ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி கர்நாடகாவில் உள்ள மங்களூரில் பிறந்தவர் ஐஸ்வர்யா ராய். 1994ம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தை வென்று ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் அழகான பெண் என்றாலே ஐஸ்வர்யா ராய் தான் என்றும் ஐஸ்வர்யா ராய் போல தனக்கு மணமகள் தேவை என்றும் கேட்க ஆரம்பித்தனர்.

இருவர் முதல் பொன்னியின் செல்வன் வரை: உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராயை இயக்குநர் மணிரத்னம் தனது இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்த குரு படத்தையும் அவர் தான் இயக்கினார். ராவணன், பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படங்களிலும் இந்த ஆண்டு வரை மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ், எந்திரன் மற்றும் ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படங்களிலும் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறினார்: 2007ம் ஆண்டு அமிதாப் பச்சனின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஐஸ்வர்யா ராய். இந்த தம்பதியினருக்கு ஆராத்யா எனும் மகள் உள்ளார். மகளுக்காக இத்தனை ஆண்டுகள் பல பிரச்சனைகளை ஐஸ்வர்யா ராய் சகித்து வந்தார் என்றும் தற்போது பிரச்சனை தலைக்கு மேல் சென்ற நிலையில், கணவர் அபிஷேக் பச்சனின் வீட்டை விட்டு பிரிந்து தனது அம்மா வீட்டுக்கு ஐஸ்வர்யா ராய் சென்றுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் அதிர்ச்சியை கிளப்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X