Aishwarya Rai - அஜித்னா ஓகே விஜய்லாம் சின்னப்பையன் சார்.. அவமானப்படுத்தினாரா ஐஸ்வர்யா ராய்?

சென்னை: Aishwarya Rai (ஐஸ்வர்யா ராய்) நடிகர் விஜய்யை ஐஸ்வர்யா ராய் அவமானப்படுத்தியதாகவும், அஜித் என்றால் ஓகே என அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக மாறியிருக்கிறார். அவருக்கென்று கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது படம் ரிலீஸானால் அன்றைய தினம் திரையரங்குகள் எல்லாம் திருவிழா கோலம் பூண்டிருக்கும். விஜய் இப்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.

Aishwarya Rai humiliated Vijay at thamizhan Movie

கோடிக்கணக்கில் வியாபாரம்: விஜய்யின் படங்கள் அனைத்துமே 100 கோடி ரூபாயை அசால்ட்டாக வசூல் செய்பவை. லோகேஷ் இயக்கிய மாஸ்டர், அட்லீ இயக்கிய மெர்சல் ஆகிய படங்கள் நூறு கோடி க்ளப்பில் அசால்ட்டாக சேர்ந்தன. அதேபோல், வம்சி இயக்கத்தில் அவர் கடைசியாக நடித்த வாரிசு திரைப்படமும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக தயாரிப்பாளர் தரப்பு அறிவித்தது. இப்போது அவர் நடித்துவரும் லியோ படமும் அந்தக் க்ளப்பில் இணையும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் விஜய்யின் ரசிகர்கள்.

கமர்ஷியல் கிங் விஜய்: விஜய் இப்போது கமர்ஷியல் கிங்காக வலம் வருகிறார். ஆனால் ஆரம்பகாலத்தில் அவர் மக்களிடம் சேர்வதற்கு குடும்பப்பாங்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அவரது ஒட்டுமொத்த பாதையை திருப்பியது திருமலை படம்தான். அந்தப் படத்திலிருந்துதான் கமர்ஷியல் பாதையில் ராஜபாட்டை நடத்திவருகிறார். தான் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக இருந்தாலும் ஆரம்பத்தில் ஒரு சில சோதனை முயற்சிகளையும் செய்திருக்கிறார் விஜய்.

தமிழன் விஜய்: விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைக்கும் அளவுக்கு இருக்கிறது விஜய்யின் வளர்ச்சி. ஆனால் இதுவரை முழுதாக அரசியல் படத்தில் நடிக்கவில்லை. முதல்வன் படத்தில்கூட அரசியல் வாசனை கொஞ்சம் தூக்கலாக இருந்ததால்தான் அதிலிருந்து விலகினார் விஜய் என்ற பேச்சும் உண்டு.

ஆனால் தமிழன் படத்தில் அரசியல் வாடை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். அந்தப் படம் பெரிய வெற்றி பெறாவிட்டாலும் கதை ரீதியாகவும், சமூக நோக்குடனும் அந்தப் படத்தில் விஜய் நடித்தது அவரது ரசிகர்களை ரசிக்கவே வைத்தது.

தமிழனில் ஐஸ்வர்யா ராய்?: தமிழன் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்த மஜீத் இயக்கினார். இயக்குநர் மணிரத்னத்தின் அண்ணன் ஜி.விதான் படத்தை தயாரித்திருந்தார். படத்தை ஸ்டார் வேல்யூவுடன் வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க முடிவு செய்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம் தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன்.

விஜய்யை அவமானப்படுத்திய ஐஸ்வர்யா ராய்?: இதற்காக மும்பை சென்ற அவர் ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம். அதற்கு யார் ஹீரோ என ஐஸ்வர்யா ராய் கேட்டாராம். விஜய் என ஜிவி பதிலளிக்க, "விஜய்யா. சார் அவன்லாம் சின்னப்பையன் சார். எனக்கு ஜோடி பொருத்தம் சரியாக இருக்காது. அஜித் மாதிரி வேற யாராக இருந்தாலும் ஓகே. எனக்கு ஜோடி பொருத்தம் சரியா இருக்கும் சார்" என கூறி ஒத்துக்கொள்ளவில்லையாம்.

இதனையடுத்து விஜய்யிடம் ஐஸ்வர்யா ராய்க்கு கால்ஷீட் பிரச்னை என கூறி சமாளித்துவிட்டு அந்த சமயத்தில் உலக அழகியாக தேர்வான ப்ரியங்கா சோப்ராவை புக் செய்தார்களாம். இந்த விஷயம் பிற்காலத்தில் விஜய்க்கு தெரியவர; ஒரு படத்தில் இணைந்து பணியாற்றும் சூழல் அமைந்ததாம். ஆனால் விஜய் அதற்கு நோ சொல்லிவிட்டாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பகிர்ந்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X