என்ன சர்ப்ரைஸ்.. ஆரத்யாவுக்கு தம்பி பாப்பா வரபோறாங்களா? அபிஷேக் டிவிட்டால் கன்ஃபியூஸான நெட்டிசன்ஸ்!
சென்னை: அபிஷேக் பச்சன் பதிவிட்ட ஒரு ட்வீட்டால் நெட்டிசன்கள் கன்ஃபியூஸாகியுள்ளனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய், தமிழில் மணி ரத்னத்தின் இருவர் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ஐஸ்வர்யா ராய்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் பிரஷாந்துடன் ஜீன்ஸ் என்ற ரொமான்டிக் படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா ராய். இதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமானார் ஐஸ்வர்யா ராய்.

திருமணம்
பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்துடன் எந்திரன் படத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இதுவரை ஏராளமான விருதுகளை பெற்றுள்ள ஐஸ்வர்யா ராய், 2007 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆரத்யா என்ற மகள் உள்ளார்.
ரசிகர்கள் கன்ஃபியூஸ்
ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் தங்களின் நடிப்பு பணியில் பிஸியாக உள்ளனர். அவ்வப்போது ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே தகராறு என தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராயின் கணவரான அபிஷேக் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதனை பார்த்த நெட்டிசன்கள், கன்ஃபியூஸ் ஆகிவிட்டனர்.
சர்ப்ரைஸ் இருக்கு
அபிஷேக் பச்சன் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஹே.. கய்ஸ்.. உங்க எல்லாருக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.. காத்திருங்கள்.. என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், என்ன சர்ப்ரைஸாக இருக்கும் என யோசித்து யோசித்து மண்டை குழம்பி விட்டனர். அமிதாப் பச்சன் படத்தின் ட்ரெயிலரா? அல்லது தூம் 4 வரப்போகிறதா என தங்களுக்கு தோன்றியதை எல்லாம் கேட்டு வருகின்றனர்.
மீண்டும் கர்ப்பம்?
மேலும் பலர் ஆரத்யாவுக்கு தம்பி பாப்பா வர போகிறார்களா? ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறை கர்ப்பமாக உள்ளாரா என்றும் கேட்டு வருகின்றனர். சிலர் படத்தில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெறப்போகிறீர்களா என்றும் கேட்டு வருகின்றனர். மேலும் அமிதாப்பின் கேபிசி டிவி நிகழ்ச்சியின் அடுத்த சீசனை நீங்கள் நடத்தப்போகிறீர்களா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











