Aishwarya Rai - அட ஐஸ்வர்யா ராய் நடித்திருக்க வேண்டிய படமா அது?.. ஆச்சரிய தகவல் இதோ
சென்னை: Aishwarya Rai (ஐஸ்வர்யா ராய்) ஐஸ்வர்யா ராய்தான் முதலில் ஜோடி படத்தில் நடித்திருக்க வேண்டியதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்திய அளவில் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராய். கடந்த 1994ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் கலந்துகொண்டு வென்றதன் மூலம் வெகு பிரபலமானார். மிஸ் யுனிவெர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென்னை விட மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் ரொம்பவே பிரபலமாகிவிட்டார். இந்தியாவிலிருந்து எத்தனை பேர் உலக அழகி பட்டம் வென்றாலும் இந்தியர்கள் மனதில் உலக அழகி என்றவுடன் முதலில் நியாபகத்துக்கு வருபவர் ஐஸ்வர்யா ராய் என்பது குறிப்பிடத்தக்கது. உலக அழகி தவிர்த்து இந்திய அரசு சார்பில் அவருக்கு பத்மஸ்ரீ பட்டமும் வழங்கப்பட்டிருக்கிறது.

சினிமாவில் என்ட்ரி: உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் இருவர் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அடுத்தடுத்து அவருக்கு ஹிந்தியில் வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக டாப் நடிகையாக உயர்ந்தார் அவர். அந்த சமயத்தில் சல்மான் கானுடன் காதலில் விழுந்த ஐஸ்வர்யா மூன்று வருடங்களுக்கு பிறகு அந்த உறவிலிருந்து வெளியே வந்தார்.
தமிழில் ஐஸ்வர்யா: தமிழில் அறிமுகமானாலும் கோலிவுட்டில் செலக்ட்டிவ்வான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். அதன்படி ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ், எந்திரன், ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நந்தினி என்றால் ஐஸ்வர்யா ராய்தான்: பொன்னியின் செல்வன் படத்தில் அவர் ஏற்றிருந்த நந்தினி கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக கல்கி உருவாக்கியிருந்த கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராய் உயிர் கொடுத்துவிட்டார் என ரசிகர்கள் புகழ்ந்தனர்.

ஜோடி: பொன்னியின் செல்வன் ஹிட்டான பிறகு ஐஸ்வர்யா ராய் அதிகம் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். இந்தச் சூழலில் தமிழில் மெகா ஹிட்டான ஜோடி படத்தில் ஐஸ்வர்யா ராய்தான் முதலில் நடித்திருக்க வேண்டியது என தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது: ஜோடி படத்தின் இயக்குநர் ப்ரவீன் காந்த் முதலில் ஐஸ்வர்யா ராயைத்தான் கமிட் செய்ய திட்டமிட்டிருந்தாராம். ஆனால் ஏதோ காரணத்தால் ஐஸ்வர்யா ராயால் நடிக்க முடியவில்லையாம். இதனையடுத்துதான் சிம்ரன் அந்தப் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். ஐஸ்வர்யா ராய் நடிக்க முடியாவிட்டாலும் அவர் இடத்தில் நடித்த சிம்ரன் நடிப்பில் பட்டையை கிளப்பியிருந்தார். ஜோடி படத்தில் பிரசாந்த்துடன் ஜோடி சேர்ந்திருக்க வேண்டிய ஐஸ்வர்யா ராய் அதன் பிறகு ஜீன்ஸ் படத்தில் ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











