ஐஸ் என் மருமகள் மட்டுமல்ல.. எனக்கு மகளாகவும் நல்ல ஃபிரண்டாகவும் இருக்கிறார்.. மனம் திறந்த அமிதாப்!

ஐஸ்வர்யா ராய் தனக்கு மருமகள் மட்டுமல்ல தனக்கு மகளாகவும் நல்ல ஃபிரண்டாகவும் இருக்கிறார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

மாமியாருக்கு பிடிக்கவில்லை.. ஆனால் மாமனாருக்கு நல்ல ஃபிரண்டாம்..!!

மும்பை: ஐஸ்வர்யா ராய் தனக்கு மருமகள் மட்டுமல்ல தனக்கு மகளாகவும் நல்ல ஃபிரண்டாகவும் இருக்கிறார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நாளிதழ் ஒன்றுக்கு தனது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அதில் தனது சினிமா அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார். அவர் கூறியதாவது,

சினிமா ஒரு மாய உலகம் என அமிதாப் பச்சன் கூறியுள்ளார். இங்கு நடிக்க வரும் நடிகரோ நடிகையோ ஏதேனும் ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்றுதான் முதலில் நினைப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

கதாப்பாத்திரத்துக்கு முக்கியத்துவம்

கதாப்பாத்திரத்துக்கு முக்கியத்துவம்

அதன்பிறகு வெற்றி படங்களில் தாங்களும் இருக்க வேண்டும் என்றும் பிறகு ரசிகர்கள் கூட்டம் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் என்றார். இவையெல்லாம் கிடைத்த பிறகு தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

உண்மை பேசும் கதாபாத்திரம்

உண்மை பேசும் கதாபாத்திரம்

வயது அதிகமாகும்போது உண்மை பேசும் கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்ற அவர் எனக்கு இப்போது 75 வயது ஆகிறது. இனிமேல் சமூகத்துக்கு தேவையான நல்ல விஷயங்களை சொல்லும் படங்களில் நடிப்பேன் என்றும் தெரிவித்தார்.

நிறைய இருக்கிறது

நிறைய இருக்கிறது

40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய தனது நடிப்பு பயணத்தில் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்றும் அமிதாப் பச்சன் தெரிவித்தார். இப்போது உள்ள இளம் நடிகர்கள் என்னை ஆச்சரியப்படுத்துகிறார்கள் என்றும் கூறினார்.

பயிற்சிகளும் எடுப்போம்

பயிற்சிகளும் எடுப்போம்

தான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடிகர்கள் ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருந்தது என்றும் வீட்டில் இருக்கும்போதும் வெளியே போகும்போதும் நடிப்பு பற்றியே யோசிப்போம். பயிற்சிகளும் எடுப்போம் என்றும் அவர் கூறினார்.

கருத்து சொல்லும் படங்கள்

கருத்து சொல்லும் படங்கள்

ஆனால் இன்றுள்ள இளம் நடிகர்கள் கஷ்டப்படுவது இல்லை என்றும் எப்படிப்பட்ட காட்சியாக இருந்தாலும் எளிதாக நடித்து விடுகிறார்கள் என்றும் அவர்கள் திறமைகளை பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன் என்றும் கூறினார். மக்களுக்கு கருத்து சொல்லும் படங்களில் நடிப்பதுதான் தனக்கு இப்போது பிடிக்கிறது என்றும் அமிதாப் பச்சன் கூறினார்.

மகள், நல்ல தோழி

மகள், நல்ல தோழி

ஐஸ்வர்யா ராய் தனக்கு மருமகள் மட்டுமல்ல மகளாகவும் நல்ல தோழியாகவும் இருக்கிறார் என்றும் அமிதாப் கூறினார். நாங்கள் இருவரும் பொது விழாக்களுக்கு சென்றால் சிறப்பாக இருக்கும் என்று கருதி இருவரையும் சேர்த்தே விழாக்களுக்கு அழைக்கிறார்கள் என்றும் அமிதாப் பச்சன் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X