மாட்டேன், ரன்பிருக்கு லிப் டூ லிப் கொடுக்க மாட்டேன்: ஐஸ்வர்யா ராய் அடம்
மும்பை: கரண் ஜோஹார் இயக்கத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் ஹீரோ ரன்பிர் கபூருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
குழந்தை ஆராத்யா பிறந்த பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் ஜஸ்பா படம் மூலம் பாலிவுட் திரும்பினார். படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா கரண் ஜோஹார் இயக்கத்தில் ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் நடித்து வருகிறார்.
ரன்பிர் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் காதலியான அனுஷ்கா சர்மாவும் படத்தில் உள்ளார்.

ஐஸ்வர்யா
படத்தில் ஐஸ்வர்யாவும், ரன்பிர் கபூரும் லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் நெருக்கமான காட்சி உள்ளது. ஆனால் அந்த காட்சியில் நடிக்க ஐஸ்வர்யா மறுத்துவிட்டாராம்.

முடியாது
ரன்பிருக்கு ஐஸ்வர்யா லிப் டூ லிப் கொடுக்க மறுத்ததை அடுத்து கரண் வேறு ஐடியா செய்துள்ளாராம். அதாவது நிஜமாக முத்தம் கொடுக்காதபடி அந்த காட்சியை படமாக்க உள்ளாராம்.

தூம் 2
முன்னதாக தூம் 2 படத்தில் ஐஸ்வர்யா ராய் ரித்திக் ரோஷனுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த காட்சி மிகவும் பிரபலம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பு மட்டுமே
இனி நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே ஐஸ்வர்யா நடிப்பாராம். ஆடை குறைப்பு, படுக்கையறை காட்சிகள், முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டாராம்.


Click it and Unblock the Notifications











