ஆரத்யாக்குட்டி ஸ்கூலுக்கு போகப் போறாங்களாம்...
மும்பை: லீவு முடிஞ்சு ஸ்கூல் ஆரம்பிச்சுட்டாங்க. விவிஐபி வீட்டு குட்டி குழந்தைகளும் ஸ்கூல் போக தயாராகுறாங்களாம்.
காதை தொட்டு ஏழாவது வயதில் நாம் ஸ்கூலுக்கு போனதெல்லாம் பழைய கதை. இப்போ, பிறந்த 14 நாட்களே ஆன குழந்தைகளுக்கெல்லாம் ஆங்காங்கே ஸ்கூல் இருக்கின்றன.
வரும் நவம்பரோடு இரண்டு வயது பூர்த்தியாகப் போகும் ஆரத்யாபச்சனுக்காக நல்ல ஸ்கூலை வலை வீசி தேடி வாராங்களாம் பச்சன் குடும்பத்தார்.

பிளே ஸ்கூல் தேடும் ஐஸ்...
இந்நிலையில், 2 வயது கூட பூர்த்தியடையாத ஆரத்யாவை ஸ்கூலுக்கு அனுப்ப முடிவு செய்து விட்டார் ஐஸ். முதல் கட்டமாக நல்ல பிளே ஸ்கூலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளாராம்.

வாங்க பழகிப்பாக்கலாம்...
டக்கென புரிந்து கொளும் கற்பூர புத்தியாம் ஆரத்யாவிற்கு. ஆனாலும், அவள் தன் சக வயது குழந்தைகளுடன் பழகி, விளையாடுவதற்காகவே இந்த ஏற்பாடாம்.

அமீர் மகன்...
சமீபத்தில் அமீர்கானின் ஒன்றரை வயது மகன் ஆசாத்தை பிளே ஸ்கூலில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











