அப்படி இருந்த ஐஸ்வர்யா ராய் இப்படி ஆனதன் ரகசியம் தெரிஞ்சிடுச்சு!!
மும்பை: பிரசவத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராய் தனது உடல் எடையை எப்படி குறைத்தார் என்ற ரகசியம் தெரிய வந்துள்ளது.
மகள் ஆராத்யாவை பெற்ற பிறகு பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு வெயிட் போட்டுவிட்டது. அவர் குண்டாக இருந்தது பற்றி உலக அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் தான் அவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம்மானார்.

ஐஸ்வர்யா
குண்டாக இருந்த ஐஸ்வர்யா ராய் ஸ்லிம்மானதை பார்த்து அனைவரும் வியந்தனர். குண்டாக இருந்தாலும், ஒல்லியாக இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் அழகு தான் என்று அவரின் ரசிகர்கள் தெரிவித்தனர்.

கேரளா
ஐஸ்வர்யா கேரளாவில் உள்ள ஒரு பண்ணையில் தயாரிக்கப்படும் ஸ்லிம்மிங், டோனிங் எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தி தான் உடல் எடையை குறைத்தாராம்.

எண்ணெய்
ஐஸ்வர்யா தற்போது ஃபேனி கான் படத்திற்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் கேரளாவில் இருந்து ஒரு அட்டைப்பெட்டி நிறைய ஸ்லிம்மிங் மற்றும் டோனிங் எண்ணெய் ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

டோனிங்
பிரசவத்திற்கு பிறகு ஒவ்வொரு படத்தில் நடிப்பதற்கு முன்பும் ஐஸ்வர்யா ஸ்லிம்மிங், டோனிங் எண்ணெய்யை பயன்படுத்தி வருகிறாராம். ஆராத்யா பிறந்த பிறகு அந்த எண்ணெய்யை தான் ஐஸ்வர்யா பெரிதும் நம்புகிறாராம்.


Click it and Unblock the Notifications











