அம்பானி வீட்டு கல்யாணம்.. விருந்தினர்களை அழகில் மட்டுமல்ல, செயலிலும் அசர வைத்த ஐஸ்!

அம்பானி வீட்டு விருந்தில் உணவுப் பரிமாறி அசர வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

Recommended Video

அம்பானியின் மகள் இஷா திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் - வீடியோ

மும்பை: அம்பானி வீட்டு கல்யாணத்தில் விருந்தினர்களுக்கு உணவுப் பரிமாறி அசர வைத்துள்ளனர் அமிதாப்பும், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள்.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா, ஆனந்த் திருமணம் மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அம்பானியின் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அதன்படி, அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயா, மகள் ஸ்வேதா, பேத்தி நவ்யா நந்தா, மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்ரும் பேத்தி ஆராத்யாவுடன் கலந்து கொண்டார்.

அழகான ஐஸ்:

அழகான ஐஸ்:

இந்த நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா ராய் சிகப்பு நிற பட்டுப் புடவையில் வந்திருந்தார். மணமகளை விட அழகாக வந்திருந்ததாக அவரது புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அம்பானி வீட்டு கல்யாண விருந்திற்கு அழகுப் பொம்மையாக மட்டும் வந்து செல்லாமல், விருந்தினர்களுக்கு உணவு பரிமாறும் வேலையையும் அக்கறையுடன் செய்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியுள்ளார் ஐஸ்.

உணவு பரிமாறிய ஐஸ்:

உணவு பரிமாறிய ஐஸ்:

பந்தியில் அமர்ந்திருந்த விருந்தினர்களுக்கு இனிப்பு உள்ளிட்ட உணவு வகைகளை சிரித்த முகத்துடன் ஐஸ் பரிமாறிய புகைப்படம் வெளியாகியுள்ளது. அம்பானி வீட்டு கல்யாணத்திற்கு வந்தவர்கள் இப்படி ஒரு அதிர்ஷ்டம் தங்களுக்கு கிடைக்கும் என நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆராத்யா:

ஆராத்யா:

ஐஸ் மட்டுமல்ல பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப், அபிஷேக் பச்சன், அமீர்கான் மற்றும் ஷாரூக்கானும் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறியுள்ளனர். ஐஸ்வர்யா - அபிஷேக் தம்பதியின் மகள் ஆராத்யாவும் உணவு பரிமாறினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

ஆச்சர்யம்:

ஆச்சர்யம்:

அம்பானி வீட்டுக் கல்யாணத்தை தங்களது சொந்த வீட்டு சுபநிகழ்ச்சியாக கருதி, பாலிவுட் பிரபலங்கள் உணவுப் பரிமாறி உபசரித்தது, விருந்தினர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தட்டில் பரிமாறப்பட்ட விதவிதமான உணவுகளோடு, பிரபலங்கள் பரிமாறிய சந்தோசத்திலேயே அவர்களது வயிறு நிறைந்திருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X