Aishwarya Rai - அத்துமீறிய தமிழ் நடிகர்?.. ஷூட்டிங் ஸ்பாட்டில் அறைந்த ஐஸ்வர்யா ராய்?

சென்னை: Aishwarya Rai (ஐஸ்வர்யா ராய்) நடிகை ஐஸ்வர்யா ராய் ஷூட்டிங் ஸ்பாட்டில் தமிழ் நடிகர் ஒருவரை அறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்திய அளவில் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராய். கடந்த ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் கலந்துகொண்டு வென்றதன் மூலம் வெகு பிரபலமானார். மிஸ் யுனிவெர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென்னை விட மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் ரொம்பவே பிரபலமாகிவிட்டார். இந்தியாவிலிருந்து எத்தனை பேர் உலக அழகி பட்டம் வென்றாலும் இந்தியர்கள் மனதில் உலக அழகி என்றவுடன் முதலில் நியாபகத்துக்கு வருபவர் ஐஸ்வர்யா ராய் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் அறிமுகம்: உலக அழகியாக வென்ற ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அடுத்தடுத்து அவருக்கு ஹிந்தியில் வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக டாப் நடிகையாக உயர்ந்தார் அவர். அந்த சமயத்தில் சல்மான் கானுடன் காதலில் விழுந்த ஐஸ்வர்யா மூன்று வருடங்களுக்கு பிறகு அந்த உறவிலிருந்து வெளியே வந்தார்.

தமிழில் ஐஸ்வர்யா ராய்: தமிழில் அறிமுகமானாலும் கோலிவுட்டில் செலக்ட்டிவ்வான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். அதன்படி ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ், எந்திரன், ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே அபிஷேக் பச்சனை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.

நந்தினியாக கலக்கிய ஐஸ்வர்யா: பொன்னியின் செல்வன் படத்தில் அவர் ஏற்றிருந்த நந்தினி கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. அபிஷேக் பச்சனேக்கூட, ஐஸ்வர்யா நடித்த படங்களிலேயே பொன்னியின் செல்வன் படம்தான் மிகச்சிறந்த படம் என பாராட்டியிருந்தார்.

அறை வாங்கிய நடிகர்: இந்நிலையில் ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தமிழ் நடிகர் ஒருவரை ஐஸ்வர்யா ராய் ஓங்கி அறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 90களில் சாக்லேட் பாய் என்று பெயர் எடுத்த நடிகர் ஐஸ்வர்யா ராயுடன் ஒரு படத்தில் நடித்தார். அப்போது ஒரு காட்சியில் அவரிடம் அந்த நடிகர் கொஞ்சம் அத்துமீறி நடக்க முயன்றுவிட்டார். இதனை உணர்ந்துகொண்ட ஐஸ்வர்யா ராய் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரது முன்னிலையிலும் வைத்து அந்த நடிகரை ஓங்கி அறைந்துவிட்டார் என கூறப்படுகிறது.

Aishwarya Rai slapped a Tamil actor on the shooting spot

யார் அந்த நடிகர்?: இந்தத் தகவலை அடுத்து அந்த நடிகர் யார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் அஜித்துக்கு எந்த காம்பினேஷன் காட்சியும் இல்லை. அதேசமயம் அப்பாஸுக்கு ஒரு பாடல் காட்சியே இருந்தது. ஒருவேளை அப்பாஸ்தான் அந்த நடிகரோ என்று கேள்வி எழுப்புகின்றனர்.

அதேசமயம் ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த்தும் அவருடன் நடித்திருந்தார்.எனவே ஐஸ்வர்யா ராயிடம் அறை வாங்கியது பிரசாந்த்தாக இருப்பாரோ என்றும் ரசிகர்களிடம் ஒரு கேள்வி ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்தத் தகவலில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X