தமிழ் நடிகைகளை விட அழகாக தமிழ் வசனம் பேசும் ஐஸ்வர்யா ராய்..மணிரத்னம் பெருமிதம்

சென்னை: ஐஸ்வர்யா ராய் தமிழ் நடிகைகளை விட அழகாக தமிழ் பேசி ஒரே டேக்கில் ஓக்கேவாக்கினார் என இயக்குநர் மணி ரத்னம் தெரிவித்தார்.

இது ஐஸ்வர்யாவுக்கு முதல் முறையல்ல தனது இருவர் படத்திலும் நீண்ட டேக்கை அழகாக நடித்து அசத்தினார் என்றார்.

ஐஸ்வர்யா ராய் மணிரத்னத்தின் மூன்று படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் பொன்னியின் செல்வனில் நந்தினி என்கிற முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

 1997 -ல் ஐஸ்வர்யா ராயை தமிழுக்கு அழைத்து வந்த மணிரத்னம்

1997 -ல் ஐஸ்வர்யா ராயை தமிழுக்கு அழைத்து வந்த மணிரத்னம்

ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வானவுடன் இந்தியா முழுவதும் பிரபலமானார். அவர் அமிதாப் பச்சன் மகனை மணந்ததால் பச்சன் குடும்பத்தில் மருமகளானார். இந்தி படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார் தமிழ் படம் ஐஸ்வர்யாவுக்கு புதிதல்ல. தமிழில் ஐஸ்வர்யாவை அழைத்து வந்தவர் மணி ரத்னம். அவரது இருவர், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இது தவிர ஜீன்ஸ், கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், எந்திரன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

 25 ஆண்டுகள் முன் நடிக்க வந்த ஐஸ்வர்யா 12 ஆண்டுகளுக்கு பின் ரீ என்ட்ரி

25 ஆண்டுகள் முன் நடிக்க வந்த ஐஸ்வர்யா 12 ஆண்டுகளுக்கு பின் ரீ என்ட்ரி

ஐஸ்வர்யா ராய் தமிழ் படங்களில் 25 ஆண்டுக்கு முன் நடிக்க வந்தார் அவரை அழைத்து வந்தவர் மணி ரத்னம். கடைசியாக எந்திரன் படத்தில் 2010 ஆம் ஆண்டு நடித்தார். அதன் பின்னர் 12 ஆண்டுகளுக்கு பின் பொன்னியின் செல்வனுக்காக மணிரத்னம் மீண்டும் அழைத்து வந்துள்ளார். ஐஸ்வர்யா ராய் மற்றும் பொன்னியின் செல்வன் குழுவினர் பட ப்ரமோஷனுக்காக பல இடங்களுக்கு செல்கின்றனர். சமீபத்தில் செய்தி சானல் ஒன்றுக்கு மணிரத்னம், ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டியில் மணிரத்னம் ஐஸ்வர்யா ராய் குறித்து பிரமித்துபோய் சில விஷயங்களை சொன்னார்.

 தமிழ் நடிகைகளை விட நன்றாக தமிழ் வசனம் பேசும் ஐஸ்வர்யா

தமிழ் நடிகைகளை விட நன்றாக தமிழ் வசனம் பேசும் ஐஸ்வர்யா

செய்தியாளர் மணி ரத்னத்திடம் ஐஸ்வர்யா ராய் பற்றிக் கேட்க, ஐஸ்வர்யா ராய் தமிழ் கற்றது தனக்கு ஆச்சர்யம் அளித்தது. தமிழ் நடிகைகளை விட நன்றாக தமிழ் வசனங்களை பேசினார் என்றார். செய்தியாளர் சோழர் என்பதை நீங்கள் எப்படி உச்சரிக்கிறீர்கள் என்று கேட்டார். நீங்கள் உச்சரியுங்கள் என மணி ரத்னம் கேட்க சோஸா என்றார். பின்னர் பேசிய மணி ரத்னம் தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா அறிமுகமான இருவர் படத்திலேயே மோகன்லாலை பார்க்க அலுவலகத்தில் நுழைந்து பேசும் காட்சியில் 2 நிமிடத்துக்கு மேல் ஒரே நீளமான காட்சியை ஒரே டேக்கில் முடித்தார்" என்று சொன்னார்.

 ஒரே டேக்கில் ஓக்கே வாங்கும் ஐஸ்வர்யா

ஒரே டேக்கில் ஓக்கே வாங்கும் ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா ராய் நடிப்பு பற்றி ஒரு பேட்டியில் சொன்ன பார்த்திபன், கார்த்தி இருவரும் அவர் ஒரே டேக்கில் ஒரு பிசிறில்லாமல் எப்படி முடிக்கிறார் என்பது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது என்று சொன்னார்கள். ஐஸ்வர்யா ராயின் கடின உழைப்பு மணி ரத்னம் வாயால் பாராட்டப்பட்டபோதே தெரிந்தது. ஆனானப்பட்ட ரஜினிகாந்தே மேடையில் ஃபீல் வரல ஃபீல் வரலன்னு மணிரத்னம் சொல்வார் என்னால் தாங்க முடியாமல் கமலிடம் ஆலோசனை கேட்டேன் என சமீபத்தில் சொன்னார். அப்படிப்பட்ட மணிரத்னத்திடம் ஒரே டேக்கில் ஓக்கே வாங்குகிறார் என்றால் பெரிய விஷயம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X