'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்.. 10 மாதத்துக்குப் பின் மும்பையை விட்டு வெளியேறிய ஐஸ்வர்யா ராய்!

By

சென்னை: பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்காக, கடந்த 10 மாதத்துக்குப் பிறகு மும்பையை விட்டு நடிகை ஐஸ்வர்யா ராய் வெளியேறி இருக்கிறார்.

கல்கியின் புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வனை' சினிமாவாக்கி வருகிறார் மணிரத்னம்.

தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட சில மொழிகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசை

ஏ.ஆர்.ரகுமான் இசை

இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தில், விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட பல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

ஆதித்த கரிகாலன்

ஆதித்த கரிகாலன்

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஐஸ்வர்யா ராய் இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, பூங்குழலி கேரக்டரில் நடிக்கிறார். சுந்தரச் சோழனாக சரத்குமாரும் ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமும் நடிக்கின்றனர். சின்ன பழுவேட்டைரையராக ரகுமான், ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி நடிக்கிறார்.

அருள்மொழி வர்மன்

அருள்மொழி வர்மன்

குந்தவையாக, த்ரிஷா, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது. அங்கு ஜெயம் ரவியின் ஓபனிங் காட்சிகள் படமாக்கப்பட்டன.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

இதையடுத்து ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. அங்கு ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்தக் கட்ட பட்டப்பிடிப்பு கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டது.

மீண்டும் படப்பிடிப்பு

மீண்டும் படப்பிடிப்பு

இந்நிலையில் லாக்டவுன் முடிந்து இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி இருக்கிறது. பொள்ளாச்சியில் தொடங்கிய படப்பிடிப்பு இப்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய், ஐதராபாத் வந்திருக்கிறார்.

வீட்டை விட்டு

வீட்டை விட்டு

கொரோனா காரணமாக கடந்த 10 மாதங்களாக எங்கும் செல்லாமல் இருந்த அவர், இப்போதுதான் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அவருடன் கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா ஆகியோரும் சென்றுள்ளனர். அங்கு அவர் சுமார் ஒரு மாதம் படப்பிடிப்பில் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X