இதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது
Recommended Video

மும்பை: ஐஸ்வர்யா ராயை திருமண நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா, ஆனந்த் திருமணம் மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அம்பானியின் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஐஸ்வர்யா ராய் தனது குடும்பத்துடன் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

நந்தா
அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயா, மகள் ஸ்வேதா, பேத்தி நவ்யா நந்தாவுடன் அம்பானி வீட்டு விழாவுக்கு வந்தார். ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவுடன் தனியாக வந்தார்.

ஆராத்யா
ஐஸ்வர்யா சிவப்பு நிற டிசைனர் சேலை அணிந்து மிகவும் அழகாக வந்திருந்தார். அவர் தனது கணவர், மகளுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்து அசந்து போகாதவர்களே இல்லை. புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் அவ்வளவு அழகாக உள்ளார்.

மணமகள்
ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை திருமண நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும். அவர் வந்தால் மணமகளை விட அவர் தான் அதிக கவனம் ஈர்க்கிறார் என்கிறார்கள்.
நெருக்கம்
அம்பானி வீட்டு விசேஷத்தில் ஐஸ்வர்யா ராய் நடிகை தீபிகா படுகோனேவுடன் நெருக்கம் காட்டினார். பார்ட்டியில் அவர் தீபிகாவுடன் சேர்ந்து நெருக்கமாக ஆடி கட்டிப்பிடித்ததை பார்த்தவர்களுக்கு அது புதிதாக இருந்தது.


Click it and Unblock the Notifications











