கணவர் விஷயத்தில் ஐஸ்வர்யா ராய் சரியான சந்தேகப் பிராணியா?
Recommended Video

மும்பை: ஐஸ்வர்யா ராய் தனது கணவர் மீது சந்தேகப்படுபவர் என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் திருமணமாகி இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
மகள் வளர்ந்த பிறகு ஐஸ்வர்யா மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

மனைவி
ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மீது சந்தேகப்படுபவர். அபிஷேக்கிற்கு தெரியாமல் அவரின் போனை எடுத்துப் பார்ப்பார் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

கணவர்
அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் ஒரே வீட்டில் இருந்தாலும் அவர்கள் தனித்தனியாக வாழ்வதாக அந்த குடும்பத்திற்கு நெருக்கமான பிரபலம் ஒருவர் தெரிவித்த நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

நாத்தனார்
ஐஸ்வர்யா ராய்க்கும் மாமியார் ஜெயா பச்சன் மற்றும் நாத்தனார் ஸ்வேதா நந்தாவுக்கும் ஆகவே ஆகாது என்று கூறப்படுகிறது. ஜெயா பச்சனின் 70வது பிறந்தநாள் பார்ட்டியில் கூட ஐஸ்வர்யாவும், ஆராத்யாவும் கலந்து கொள்ளவில்லை.

நம்பிக்கை
நான் என் கணவரை சந்தேகப்படுபவள் அல்ல. அவரின் செல்போனை அவருக்கு தெரியாமல் ஒருபோதும் எடுத்துப் பார்த்தது இல்லை என்று பட விளம்பர நிகழ்ச்சியின்போது ஐஸ்வர்யா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்
திருமணம் முடிந்த பிறகும் ஏன் பெற்றோர் வீட்டில் வசிக்கிறீர்கள் என்று அபிஷேக்கை நெட்டிசன் ஒருவர் கலாய்க்க அவரோ பெற்றோருடன் சேர்ந்து வசிப்பதில் தான் எனக்கு பெருமை. நீங்களும் முயன்று பாருங்கள் நன்றாக இருக்கும் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











