பட வாய்ப்புக்காக படுக்கைக்கு சென்றே தீர வேண்டுமா?: ஐஸ்வர்யா ராய் விளக்கம்
கேன்ஸ்: பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராய் கருத்து தெரிவித்துள்ளார்.
பட வாய்ப்புக்காக நடிககைளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பல்வேறு திரையுலகை சேர்ந்த நடிகைகள் ஒவ்வொருவராக பேசத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராயும் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

ஐஸ்வர்யா ராய்
நடிகர், நடிகைகளுக்கு சம்பளம் கொடுப்பதில் இருக்கும் பாகுபாடு நாம் தேர்வு செய்வதில் தான் உள்ளது. நல்லது, கெட்டது உள்ளது. அதில் நாம் எதை தேர்வு செய்கிறோம் என்பது முக்கியம். பிடிக்காதவற்றை செய்ய முடியாது என்று கூறி நடையை கட்டுங்கள். மாற்றம் தானாக வரும்.

நடிகைகள்
நடிகைகளுக்கு சம்பளம் குறைவாக தருகிறார்கள் என்று நினைத்தால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூற வேண்டும். சிலர் முடியாது என்கிறார்கள், சிலர் ஒப்புக் கொள்கிறார்கள்.

போராட்டம்
சம்பள பாகுபாடு, வேலை இடத்தில் பாலியல் தொல்லை ஆகியவற்றை எதிர்த்து ஹாலிவுட்டில் இயக்குனர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் என்று 81 பெண்கள் சேர்ந்து #MeToo இயக்கத்தில் பங்கு கொண்டுள்ளனர். அது பாராட்டுக்குரியது. அதில் நானும் சேர விரும்புகிறேன்.

படுக்கை
கடவுளின் அருளால் இதுவரை நான் பட வாய்ப்புக்காக படுக்கை பிரச்சனையை சந்தித்தது இல்லை. நான் சினிமாவுக்கு புதிது அல்ல. ஆனால் என் கதை வேறு. சீனியர்களும், சக நடிகைகளும் தங்களுக்கு நடந்தது பற்றி பேசும் போது நான் காதை பொத்திக் கொண்டு இருக்க முடியாது.

கிண்டல்
நான் கேன்ஸ் திரைப்பட விழாவில் அணியும் உடைகள், மேக்கப்பிற்காக பலர் கிண்டல் செய்கிறார்கள். அன்பு அதிகம் கிடைப்பதால் கேலி கிண்டலை கண்டுகொள்வது இல்லை. எனக்கு பயம் என்பதே கிடையாது என்கிறார் ஐஸ்வர்யா ராய்.


Click it and Unblock the Notifications











