விருது விழாவில் செய்தியாளர் கேட்ட அந்த கேள்வி.. கடுப்பான ஐஸ்வர்யா ராய்.. என்ன நடந்தது?
சென்னை: IIFA உற்சவ விருதுகள் வழங்கும் விழாவில் ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவை பற்றி, செய்தியாளர் கேட்ட கேள்வியால் கடுப்பான, ஐஸ்வர்யா ராய் சரியான பதிலடி கொடுத்தார். இது தற்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
பிரபலமாக இருந்தால், பெயர், புகழ், பணம் என அனைத்தும் கிடைக்கும். ஆனால், அப்படி பிரபலமாக இருப்பதால், தனிப்பட்ட ஆசை, தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்தையும் தொலைத்துவிட்டுத்தான் வாழவேண்டி உள்ளது.குறிப்பாக நடிகர், நடிகைகளுக்கு இந்த பிரச்சனை மிக அதிகமாகவே உள்ளது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பொது இடத்தில் விவாதப்பொருளாகவே பார்க்கப்படுகிறது.

பல சர்ச்சைகள்: உலக அழகியான ஐஸ்வர்யா ராய், சினிமாவில் நடிக்க வந்தது முதல் தற்போது வரை பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த நடிகருடன் காதல், இந்த நடிகருடன் டேட்டிங் என பேசப்பட்டு வந்த போது, அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை கரம் பிடித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த தம்பதிகளுக்கு ஆராத்யா என மகள் இருக்கும் நிலையில், தற்போது இவரின் பெயர் விவாகரத்து சர்ச்சையில் அடிபட்டு வருகிறது.
தனியாக கலந்து கொண்டார்: அண்மையில் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை மாதம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில், ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் குடும்பம் குடும்பமாக கணவன் மனைவியாக திருமணத்தில் கலந்து கொண்டு ஆடிப் பாடி மகிழ்ந்தனர். ஐஸ்வர்யா ராய் மட்டும் தனது மகள் ஆராத்யாவுடன் வந்திருந்தார். அதேபோல, அமிதாப் பச்சன், அவர் மனைவி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சனுடன் கலந்து கொண்டனர். ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக் பச்சனும் வராதது பெரும் பேசுபொருளாகி இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் பரவின.
கடுப்பான ஐஸ்வர்யா ராய்: இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த ஆண்டுக்கான IIFA உற்சவ விருதுகள் வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ஐஸ்வர்யா ராய்க்கு சிறந்த முன்னணி கதாபாத்திரத்துக்கான விருது வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் ஐஸ்வர்யா ராய் பேசினார். அப்போது ஒரு செய்தியாளர், பெரும்பாலான நிகழ்ச்சியில் நீங்கள் உங்கள் மகள் ஆராத்யா அழைத்து வருவது ஏன் என்று கேட்டார். இந்த கேள்வியால் கடுப்பான ஐஸ்வர்யா ராய், ஏன் என்றால் அவள் என் மகள் என்னுடன் தான் இருப்பாள் என்று சற்று கோவமாக பதில் அளித்தார்.


Click it and Unblock the Notifications











