கருப்பு உடை... பேய் வேடம் மிரள வைக்கும் ஐஸ்வர்யா ராயின் மேல்பிஷியண்ட்
மும்பை: ஹாலிவுட் திரைப்பட நாயகி ஏஞ்சலினா ஜோலி நடித்த மேல்ஃபிஷியண்ட் திரைப்படம் இந்தியில் வெளியாகவுள்ளது. அந்தப் படத்தில் ஏஞ்சலினா ஜோலிக்காக ஐஸ்வர்யா ராய் குரல் கொடுத்துள்ளார். இந்த படத்தின் சிறு பகுதி நேற்று வெளியிடப்பட்டது. அதில் ஐஸ்வர்யா ராய் கருப்பு உடையில் பேய் வேடத்தில் மிரளவைக்கிறார். அந்த சிறு பகுதி வெளியான 1 நிமிடத்திலேயே ஒரு லட்சம் லைக்குகளை பெற்று அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.
ஐஸ்வர்யா ராய் பச்சன், ஹாலிவுட் திரைப்பட நாயகி ஏஞ்சலினா ஜோலியின் காவிய கதை ஒன்றிற்கு குரல் கொடுத்துள்ளார். வெகு விரைவில் வெளியாகவுள்ள அந்த திரை படத்திற்கு பெயர் மேல்பிஷியண்ட். இந்தி மொழியில் வரவுள்ளது.

இத்திரைப்படத்திற்காக அனைவரும் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஐஸ்வர்யா ராய் தனது இன்ஸ்டாகிராம் பகுதியில் அந்த படத்தின் சிறு பகுதியை பகிர்ந்துள்ளார். அதனை கண்டு கழிக்கும் நேயர்கள் அதன் பிரமாண்டத்தை பார்த்தும், கதாநாயகியான ஐஸ்வர்யாவை வேறு கோணத்தில் பார்த்தும் வியப்பில் மூழ்கியுள்ளனர். கருப்பு உடையில், பேய் வேடத்தில் மிரளவைக்கிறார்.
இதனை பகிர்ந்த பின்னர், டிஸ்னி குடும்பத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார். அந்த பதிவில் அவர் ஒரு இந்தி டயலாக் ஒன்றை சொல்லியிருப்பார். சப்னே மேரா பியார் தேகா ஹாய், அப் தேகேஞ் மேரா குஷா மேரா நஃப்ரத் (Sabne mera pyaar dekha hai, ab dekhenge mera gussa, meri nafrat.). இதன் அர்த்தம், இது நாள் வரை என் அன்பான தோற்றத்தை பாத்திருக்கீங்க, இனிமேல் என் கோபத்தை பார்க்கபோறீங்க, என் வெறுப்பை பார்க்கப்போறீங்க, என்பது தான்.
நேற்று அந்த சிறு பதிவு வெளியான உடனே ஒரு லட்சம் லைக்ஸ் பெற்று விட்டதாம். அந்தப் பதிவு வெறும் ஒரு நிமிடம் 11 நொடிகள் மட்டுமே. அப்ப முழு படமும் எப்படி இருக்கும் என்று யோசிச்சு பாருங்களேன். ரசிகர்கள் அனைவரும் ஐஸ்வர்யாவை, அந்த வேடத்தை தைரியமாக எடுத்து நடித்தமைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அவரது கணவர் அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பகுதியில் பதிவு செய்து ஹவ் கூல் என்று எழுதினார். ஐஸ்வர்யா இந்த வேடத்தை எடுத்து பக்காவாக செய்ததற்கு, டிஸ்னி இந்தியா தலைமை அதிகாரி பிக்ரம் துக்கல் வியந்துபோய்விட்டார். கனவில் கூட நினைக்கவில்லை, ஏஞ்சலினா பாத்திரத்தை ஐஸ்வர்யாவைத் தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது என்று கூறினார். அக்டோபர் 18ஆம் தேதி இரு மொழிகளில் திரைக்கு வருவதாக தகவல்.


Click it and Unblock the Notifications