மாமியார் ஜெயா பச்சன் நச்சரிப்பு தாங்கல: தனிக்குடித்தனம் போக ஐஸ்வர்யா ராய் திட்டம்
மும்பை: மாமியார் ஜெயா பச்சன் அனைத்து விஷயங்களிலும் தலையிடுவது ஐஸ்வர்யா ராய்க்கு பிடிக்கவில்லையாம். இதனால் மாமியார் வீட்டில் இருந்து வெளியேறி அபிஷேக், ஆராத்யாவுடன் தனியாக வசிக்க திட்டமிட்டுள்ளாராம் ஐஸ்.
ஐஸ்வர்யா ராய் தனது மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா பச்சன், கணவர் அபிஷேக், மகள் ஆராத்யாவுடன் மும்பையில் உள்ள பங்களாவில் வசிக்கிறார். மாமியார் வீட்டில் வசிக்கும் ஐஸ் குழந்தை பெற்ற பிறகு படங்களில் நடிக்காமல் வீட்டில் இருந்து மகளை கவனித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவருக்கும், ஜெயா பச்சனுக்கும் இடையேயான உறவு சுமூகமாக இல்லை என்று கூறப்படுகிறது.

நொய் நொய்ன்னு
ஜெயா பச்சன் ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுகிறாராம். இது ஐஸுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். மேலும் ஐஸ் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் ஜெயா தலையிடுகிறாராம்.

மாமா ஓ.கே.
மாமனார் அமிதாப் பச்சன் அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருக்கிறாராம். அதனால் அவர் பற்றி ஐஸுக்கு எந்த மனவருத்தமும் இல்லையாம்.

மீண்டும் நடிப்பு
ஐஸ்வர்யா மீண்டும் படங்களில் நடிக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இது குறித்த அனைத்து விவரங்களையும் தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாராம் ஜெயா.

தனிக்குடித்தனம்
மாமியாரின் நச்சரிப்பு தாங்க முடியாததால் ஐஸ்வர்யா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் தனிக்குடித்தனம் செல்ல திட்டமிட்டுள்ளார் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.
இன்றைய மாமியார்-மருமகள் சண்டைகளை தவிர்ப்பதற்கான வழிகள்!!!


Click it and Unblock the Notifications











