»   »  9 விரலை காட்டிய ஐஸ்வர்யா.. தலை சுற்றிப் போன சிரஞ்சீவி மகன்!

9 விரலை காட்டிய ஐஸ்வர்யா.. தலை சுற்றிப் போன சிரஞ்சீவி மகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சிரஞ்சீவியுடன் சேர்ந்து நடிக்க ரூ. 9 கோடி கேட்டு தயாரிப்பாளர் ராம் சரணுக்கு கண்ணை கட்ட வைத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

அரிசயலுக்கு போன சிரஞ்சீவி கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி எண் 150 படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

Aishwarya Rai wants Rs. 9 crore to romance Chiranjeevi

இதையடுத்து அவர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடிக்கிறார். படத்தை அவரது மகனும், நடிகருமான ராம் சரண் தேஜா தயாரிக்கிறார். படத்தில் சிருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க விரும்புகிறார்கள்.

இந்நிலையில் ராம் சரண் ஐஸ்வர்யா ராயை அணுகி நடிக்க கேட்டதற்கு அவர் ரூ. 9 கோடி சம்பளம் கேட்டுள்ளார். ரூ. 9 கோடி சம்பளம் என்பது ரொம்பவே ஜாஸ்தி என்று நினைக்கிறார் ராம் சரண்.

பெரிய நடிகை, அப்பா படத்தில் நடித்தால் நல்லது, பணத்தை பார்க்காதப்பா என்று ராம் சரணுக்கு ஆளாளுக்கு அட்வைஸ் செய்கிறார்களாம்.

English summary
Aishwarya Rai has reportedly asked Rs. 9 crore to act with Megastar Chiranjeevi in his upcoming movie 'Uyyalawada Narasimha Reddy'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil