மீண்டும் மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆனால், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியில்லை!
மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் ஜிவிபிக்கு அக்காவாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: மணிரத்னம் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செக்கச் சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து தனது உதவியாளர் தனசேகரன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார் மணிரத்னம். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தைத் தயாரிப்பதோடு, தனசேகரனோடு இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார் மணிரத்னம்.

'96'படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தில் அவர் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம். சகோதரியாக நடிக்க இருக்கிறாராம்.
விரைவில் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடிப்பவர்கள் யார் என்ற விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் 'செக்கச்சிவந்த வானம்' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். தற்போது மீண்டும் மணிரத்னம் தயாரிப்பில் அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











