Aishwarya Rajesh: அதுக்காக ஆண்களை பிடிக்காது என சொல்லவில்லை... ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன்

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், ஃபர்ஹானா, தீராக் காதல் என அடுத்தடுத்து படங்கள் வெளியாகியிருந்தன.

பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே அதிகமாக நடித்து வருகிறார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.

 Aishwarya Rajesh: Actress Aishwarya Rajesh explains whether she likes men or not

ஆண்கள் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்:லோ பட்ஜெட் படங்களுக்கான முதன்மையான நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் காணப்படுகிறார். அதேபோல், ஒருசில படங்களில் முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து வருகிறார். முக்கியமாக பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் அதிகம் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.

காக்கா முட்டை, கனா, தர்மதுரை, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா போன்ற படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறப்பான கம்பேக் கொடுத்தன. முக்கியமாக சில தினங்களுக்கு முன்னர் வெளியான ஃபர்ஹானா பல தடைகளை கடந்து திரையரங்குகளில் வெளியானது. அதேபோல், கடந்த வாரம் ரிலீஸான தீராக் காதல் படமும் கலவையான விமர்சங்களைப் பெற்றது.

இந்நிலையில் PVR திரையரங்குகள் நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவர் மீனா சாப்ரியா எழுதிய UNSTOPPABLE என்ற சுயசரிதை புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், மைக் செட் ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், தனது சினிமா கேரியர் குறித்த அனுபவங்களை ஷேர் செய்தார்.

 Aishwarya Rajesh: Actress Aishwarya Rajesh explains whether she likes men or not

சினிமாவில் அறிமுகமான காலத்தில் உங்களால் சில பாத்திரங்கள் எல்லாம் ஏற்று நடிக்கவே முடியாது என பலரும் கூறினர். அப்படியிருக்கும் போது நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்கணும் எனக் கேட்டுள்ளனர் என வேதனையுடன் பேசினார். மேலும் நான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிகம் நடிப்பதால் எனக்கு ஆண்களை பிடிக்காது என யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம் என தைரியமாக பேசினார்.

நான் இப்படியெல்லாம் பேசுவதால் பெண்ணியவாதியா என தன்னிடம் சிலர் கூறினர். அப்படியெல்லாம் கிடையாது ஆண்களிலும் பெண்களிலும் தவறானவர்கள் உள்ளார்கள் என ஓபனாக பேசினார். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த மனம் திறந்த பேச்சு ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வருகிறது. எதுவாகினும் வெளிப்படையாக பேசிவிடும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது ஆண்களை பிடிக்குமா இல்லையா என்பதையும் ஓபனாகவே தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X