இந்தா வந்துட்டேன்.. மல்லுவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஓணம் சேலையில் அசத்தல்!
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓணம் சேலையில் நடத்திய அசத்தல் போட்டோ ஷுட்டை பார்த்த ரசிகர்கள் வெறித்தனம் என புகழ்ந்துள்ளனர்.
Recommended Video
நாடு முழுவதும் உள்ள மலையாள மக்கள் நேற்று முன்தினம் ஓணம் பண்டியை கோலாகலமாக கொண்டாடினர்.
கொரோனா அச்சுறுத்தல், கேரள வெள்ளம் போன்ற காரணங்களால் ஓணம் பண்டிகை களையிழந்து காணப்பட்டாலும் மக்கள் வீடுகளில் உற்சாகமாய் கொண்டாடினர்.

நடிகைகளின் ஓணம்
நடிகைகள் பலரும் தங்களின் ஓணம் கொண்டாட்டத்தை போட்டோக்களாக ஷேர் செய்தனர். ஓணம் சேலையில் நடிகைகள் ஓணம் கொண்டாடிய போட்டோக்கள் சமூக வலைதளங்களை ஆட்கொண்டன.

அசத்தல் போட்டோ
குறிப்பாக நடிகை நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பார்வதி நாயர், மஞ்சிமா மோகன் போன்றவர்களின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி ட்ரென்ட்டானது. பல நடிகைகள் ஓணம் சேலையில் அசத்தல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தினர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல்
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ஓணம் ஸ்பெஷல் போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது. சிவப்பு நிற ஜாக்கெட், ஓணம் சேலை என அணிந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் வண்ணப்பூக்களால் அத்தப்பூ கோலம் போட்டு கலக்கல் போஸ் கொடுத்துள்ளர்.

வெறித்தனம்
ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வெறித்தனம், வேற லெவல், செம அழகு என வர்ணித்துள்ளனர். மலையாள நடிகைகள் பலரும் ஓணம் சேலையில் போட்டோ ஷுட் நடத்திய நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷும் கோதாவில் குதித்துள்ளார்.

கிராமத்து பெண்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். எந்த மாதிரியான கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதனை பர்ஃபெக்ட்டாக செய்து வருகிறார். குறிப்பாக கிராமத்து பெண்ணாக பட்டைய கிளப்பி வருகிறார்.

கைவசம்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின், கா பெ ரணசிங்கம் மற்றும பூமிக்கா ஆகிய படங்கள் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. மேலும் திட்டம் இரண்டு, துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











