ஆர்.ஜே.பாலாஜியின் ‘ரன் பேபி ரன்‘ டிரைலர்... அதிரடியான த்ரில்லர் படம்!

சென்னை : ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'ரன் பேபி ரன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ரன் பேபி ரன்.

இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி கதாநாயகனாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், ஸ்ருதி வெங்கட், ஹரிஷ் பெராடி, ஜோ மல்லூரி, விவேக் பிரசன்னா, நாக்கினீடு, ராதிகா சரத்குமார், பகவதி பெருமாள் என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி

பன்முகத் திறன் கொண்டவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்த இவர், தமிழ் திரைத் துறையில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். கதையின் பிரதான கதாபாத்திரமாக எல்கேஜி, மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ரன் பேபி ரன்

ரன் பேபி ரன்

த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் ரன் பேபி ரன் திரைப்படத்தை சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். இப்படம் பிப்ரவரி 3ந் தேதி வெளியாக உள்ளது. எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு 'ப்ரின்ஸ் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார்.

த்ரில்லர் கதை

த்ரில்லர் கதை

இந்நிலையில், 'ரன் பேபி ரன்'திரைப்படத்தின் டிரைலரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். புதிய சாயலில் RJ_Balajiயைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது. #RunBabyRun டீம் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார். இத்திரைப்படம் ஒரு பெண்ணின் கொலையைச் சுற்றியே நடக்கிறது. கொலை மர்மத்தில் சிக்கிக்கொள்ளும் ஆர்ஜே பாலாஜி அதில் இருந்து எவ்வாறு தன்னை எப்படி காத்துக்கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

சிங்கப்பூர் சலூன்

சிங்கப்பூர் சலூன்

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் எனும் திரைப்படம் தயாராகி வருகிறார். சத்யராஜ், லால்,தலைவாசல் விஜய் உட்பட பலர் நடிக்கின்றனர். ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்து வருகிறது. இந்த படம் மனதுக்கு நெருக்கமான படம் என்றும் தனக்கு பிடித்த படம் என்றும் ஆர்ஜேபாலாஜி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X